இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 7 தொடர்ச்சி)
8
38-45.] எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
பிற நூல்களில் முகப்புப் பக்கம் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பும் அதைச் சொடுக்கினால் தேடுதல் பகுதியும் வரும். மாறாக, இவற்றில் தலைப்பில் ‘சொல்’ தேடுதல் பகுதி உள்ளது(படவுருக்கள் 40 &41)
ஐங்குறுநூறு உரையில் மட்டும் தேடுதல் பகுதி (பக்கம் தேடல், சொல் தேடல்) உள்ளது(படவுருக்கள் 42 & 43).
பதிற்றுப்பத்து: முகப்பு இடப்பக்க அட்டவணையிலும் தலைப்பிலும் தேடுதல் குறிக்கப் பெற்றுள்ளது. சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ காணப்படும் (படவுருக்கள் 44, 45 & 46). இதே முறையை எல்லா நூல்களிலும் பயன்படுத்தலாம் அல்லவா?
பரிபாடல்: தேடுதல் பகுதி இல்லை. மூலத்துடன் இணைந்த உரைப்பகுதியிலும் தேடுதல் பகுதி இல்லை (பட உரு 47).
ஆனால், அட்டவணையில் உள்ள (வ. சோமசுந்தரனார் உரை, பரிமேலழகருரை) உரைப்பகுதியைத் தெரிவு செய்து சென்றால், உரை பொருளடக்கப்பகுதியில் தேடுதல் தலைப்பு இருக்கும். அதன்மூலம், பக்கம் தேடல், சொல் தேடல் பகுதிவரும் (படவுருக்கள் 48 , 49 & 50)
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply