இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 தொடர்ச்சி)
9
கலித்தொகை:
முகப்பிலும் பாடல் பகுதியிலும் தேடுதல் இல்லை. பாடலுடன் கூடிய உரைப்பக்கங்க ளிலும் தேடுதல் பொறியும் இல்லை (பட உரு 51).
ஆனால், நேரடியாக உரைக்குச் சென்றால், உரைப்பக்கங்களில் ‘பக்க எண்’ தேடல் வருகிறது (பட உரு 52).
உரைப்பக்க அட்டவணை மேற்புறத்தில் உள்ள தேடுதலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 53 & 54)
இவ்வாறு, உரைப்பக்கத்தை அணுகும் முறைக்கேற்ப, தேடலின்மை, பக்க எண் தேடல், பக்கமும் சொல்லும் தேடல் என்ற முரண்பாட்டு நிலை தேவைதானா?
அகநானூறு: முகப்பு இடப்பக்க அட்டவணையில் தேடுதல் பகுதியில் ‘சொல் தேடல்’ குறிக்கப் பெற்றுள்ளது(படவுருக்கள் 55 & 56).
ஆனால், பாடல் பக்கங்களில் தேடுதல் வாய்ப்பு இல்லை(பட உரு 57).
அதுபோல், பாடல் பகுதியுடன் இணைந்த உரைப் பகுதியிலும் எவ்வகைத் தேடுதல் பொறியும் இல்லை (பட உரு 58).
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply