இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 தொடர்ச்சி)
10
புறநானூறு: முகப்பு அட்டவணையிலோ பாடல் பக்கங்களிலோ தேடுதல் பகுதி இல்லை(பட உரு 59)
உ.வே.சா. உரைப்பக்க முகப்பு மேற்புறத் தேடுதலைச் சொடுக்கினால், ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன (பட உரு 60).
உ.வே.சா. உரைப்பகுதியில் உரைப் பக்கங்களில் ‘பக்க எண் தேடல்’ உள்ளது (பட உரு 61).
உரைவேந்தர் ஔவை உரைப்பக்க முகப்புத் தேடலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘பாடல் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 62 & 63)
இவ்வாறு எட்டுத்தொகை நூல்களுக்கிடையயேும் கூட, ஒத்த தேடுதல் பொறி அமைக் கவில்லை. ஔவை உரையில் மூவகைத் தேடுதல் பொறி வாய்ப்பு வழங்கியிருக்கையில், இவ்வாய்ப்புகளை, பாடல் பகுதிகளிலும் பாடலுடன் கூடிய தனி உரைப்பகுதியிலும் மற்றோர் உரையான உ.வே.சா.உரைப்பகுதியிலு்ம் வழங்குவதற்கு என்ன தடை என்று புரியவில்லை? போதிய தமிழறிவும் தமிழ் ஈடுபாடும் இல்லை என்பதைத்தவிர வேறு எதுவும் நம்மால் கூற இயலவில்லை.
(தொடரும்)
Leave a Reply