(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 தொடர்ச்சி)

thedupori-thalaippu

46-64.] பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

இவற்றுள் 19 நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, இன்னிலை ஆகிய நூல்களின் உரைப்பக்கத்தின் பொருளடக்கப் பக்கத்தில் உள்ள தேடுதல் பகுதியைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன. பக்கங்களில் பக்க எண் தேடல் மட்டும் உள்ளது. வழக்கம்போல் பாடல் பகுதியில் சொல் தேடல் வைக்கவில்லை.

திருக்குறள் இடப்பக்க முகப்பு அட்டவணையில் குறள் தேடல் கீழே, எண் தேடல், சொல் தேடல், அதிகாரம் தேடல் உள்ளன. திருக்குறள் பக்கங்களில் தேடல் வாய்ப்பு இல்லை. (இவற்றிற்கும் அடுத்து வருவனவற்றிற்கும் உள்ள தேடுதல் பொறி உள்ளமையும் இன்மையும் முந்தையனபோல் உள்ளமையால் எடுத்துகாட்டுப் படங்கள் தரவில்லை.)

காப்பியங்கள்

 

65.] சிலப்பதிகாரம் & 66.] மணிமேகலை

இடப் பக்க முகப்புப் பகுதியில் உள்ள தேடுதல் பகுதியைச் சொடுக்கினால் ‘சொல் தேடல்’ பகுதி வருகிறது. பாடல் பக்கங்களிலும் மேல் பக்கத் தேடுதல் தலைப்பைச் சொடுக்கினாலும், ‘சொல் தேடல்’ பகுதி வருகிறது. ஆனால், உரைப்பகுதியில் ‘பக்க எண்’ தேடலும் பொருளடக்கத் தேடல் பகுதி வழியாகச் ‘சொல் தேடல்’ காணலும் உள்ளன.

 

67.] சீவகசிந்தாமணி

இடப் பக்க முகப்புப் பகுதியில் உள்ள தேடுதல் பகுதியைச் சொடுக்கினால் ‘சொல் தேடல், பக்கம் தேடல், பாடல் தேடல்’ பகுதி வருகிறது. பாடல் பக்கங்களிலும் மேல் பக்கத் தேடுதல் தலைப்பைச் சொடுக்கினாலும், ‘சொல் தேடல்’ பகுதி வருகிறது. ஆனால், உரைப்பகுதியில் ‘பக்க எண்’ தேடலும் பொருளடக்கத் தேடல் பகுதி வழியாகச் ‘சொல் தேடல் பக்கம் தேடல், பாடல் தேடல் பகுதி’ காணலும் உள்ளன.

68.] வளையாபதி & 69.] குண்டலகேசி

மூலப்பகுதியிலும் மூலத்துடன் இணைந்த உரைப்பகுதியிலும் எவ்வகைத்தேடுதல் பொறியும் இல்லை. முகப்பு அட்டவணைத் தேடுதல் பகுதியின் கீழ்ச் சொல் தேடல், பாடல் தேடல் ஆகியன உள்ளன.

முகப்பு உரைப் பகுதியைச்சொடுக்கி அதன் பொருளடக்கப்பகுதிக்குச் சென்றால் சொல் தேடலும் பக்கம் தேடலும் உள்ளன. இவற்றை முழுமையாக மூலப் பகுதியில் தருவதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. இயந்திரகதியில் வேலை பார்த்தால் இதுதான் நிலைமை!

 

70.] பெருங்கதை

மூலப்பகுதியிலும் மூலத்துடன் இணைந்த உரைப்பகுதியிலும் எவ்வகைத்தேடுதல் பொறியும் இல்லை. உரைப்பகுதியில் மட்டும் ‘பக்கம் தேடல், சொல் தேடல்’ உள்ளன.

 

71.] கம்பராமாயணம்

மூலப்பகுதியிலும் மூலத்துடன் இணைந்த உரைப்பகுதியிலும் எவ்வகைத்தேடுதல் பொறியும் இல்லை. முகப்பு இடப்பக்க அட்டவணையில் தேடுதல் தலைப்பில், ‘எண் தேடல், சொல் தேடல்’ மட்டும் உள்ளன. ஒவ்வொரு காண்டத்தின் பொருளடக்கப் பகுதியின் மேற்பக்கத் தேடுதல் பகுதியில் ‘பக்கம் தேடல், பாடல் தேடல், சொல் தேடல்’ உள்ளன..

 

72.] வில்லிபாரதம்

மூலப்பகுதியிலும் மூலத்துடன் இணைந்த உரைப்பகுதியிலும் எவ்வகைத்தேடுதல் பொறியும் இல்லை. முகப்பு இடப்பக்க அட்டவணையில் தேடுதல் தலைப்பில், ‘எண் தேடல், சொல் தேடல்’ மட்டும் உள்ளன, ஒவ்வொரு காண்ட உரையின் பொருளடக்கப் பகுதியின் மேற்பக்கத் தேடுதல் பகுதியில் ‘பக்கம் தேடல், சொல் தேடல்’ உள்ளன.

 

73.] உதயண குமார காவியம் & 74.] மேருமந்தர புராணம்

உரையின் பொருளடக்கப் பகுதியின் மேற்பக்கத் தேடுதல் பகுதியில் ‘பக்கம் தேடல், பாடல் தேடல், சொல் தேடல்’ உள்ளன. ஆனால், மூலப்பகுதி தனியாக இல்லை.

 

75.] நாக குமார காவியம்

மூலப்பகுதியிலும் மூலத்துடன் இணைந்த உரைப்பகுதியிலும் எவ்வகைத்தேடுதல் பொறியும் இல்லை. முகப்பு அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பில், சொல் தேடல், பாடல் எண் தேடல் உள்ளன. உரைப்பக்கப் பொருளடக்கப் பகுதியில் பக்கம் தேடல், சொல் தேடல் மட்டும் உள்ளன. ஆனால், மூலப்பகுதியிலும் மூலத்துடன் இணைந்த உரைப்பகுதியிலும் எவ்வகைத் தேடல் பொறியும் இல்லை.

 

76.] யசோதர காவியம், 77.] அரிச்சந்திர புராணம் & 78.] காஞ்சிப் புராணம்

உரைப் பகுதிப் பொருளடக்கப்பக்கம், தேடுதல் தலைப்பில், ‘பக்கம் தேடல், சொல் தேடல்’ உள்ளன. பக்கங்களில் ‘பக்க எண் தேடல்’ உள்ளது. ஆனால், மூலப்பகுதி தனியாக இல்லை.

 

79.] நீலகேசி

பாடல் பக்கங்களில் உள்ள தேடுதல் பகுதியைச் சொடுக்கினால் ‘சொல் தேடல்’ வருகிறது. முகப்புப் பொருளடக்கப் பக்கத்தில் தேடுதல் இணைப்பு இல்லை.

 

80.] சூளாமணி

உரைப்பகுதியின் பொருளடக்கப் பகுதியின் தேடுதல் இணைப்பில் ‘பக்கம் தேடல், பாடல் தேடல், சொல் தேடல்’ உள்ளன. உரைப்பக்கங்களில் பக்க எண் தேடுதல் உள்ளது.

 

81.] இராவண காவியம்

பொருளடக்கப் பகுதியின் தேடுதல் இணைப்பில் பக்கம் தேடல், சொல் தேடல் உள்ளன. பக்கங்களில் பக்க எண் தேடுதல் உள்ளது. ஆனால், உரை இல்லை.

 

82.] குழந்தைகள் கலைக்களஞ்சியம்

தொகுதி முகப்புப் பக்கங்களில் ‘பக்க எண் தேடுதல்’ மட்டுமே உள்ளது(பட உரு 64).

படஉரு 64

படஉரு 64

ஆனால், அகரவரிசைப்படி நாம் படிக்கும் பொழுது பக்க எண் தேடலும் இல்லை (பட உரு 65)

படஉரு 65

படஉரு 65

முரண்பாடுகளைக்கூட உணர இயலாதவர்களால் முத்தமிழ் எங்ஙனம் வளரும்?

83.] கலைக்களஞ்சியம் : ‘சொல் தேடல்’ இல்லை. கலைக்களஞ்சிய அட்டவணை சீருருவில் அமையாமல் நெருநல் (TAB_CK-Nerunal) எழுத்துருவில் அமைந்துள்ளமையால் படிக்கஇயலவில்லை (பட உரு 66).

படஉரு 66

படஉரு 66

படித்துப் பார்ப்பதும் இல்லை; தொடர் நடவடிக்கையும் இல்லை என்னும் போக்கால் செலவுத்தொகையும் மேற்கொள்ளும் முயற்சியும் உரிய பயன்கள் பெறாமல் போகும் அவலங்கள் தொடர்வதை உணர்வார்களா?

(தொடரும்)

ilakkuvanar_thiruvalluvan+10