இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி)
சிற்றிலக்கியங்கள்
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், பாடல், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் இல்லை.
சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும், ‘மூலமும் உரையும் இணைந்த பகுதியிலும்’ பக்கம் மட்டும் தேடலாம்.
திருவருட்பா : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும் பாடல் தேடலும் மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்க எண் தேடலும் உள்ளன.
தாயுமானவடிகள் திருப்பாடல்கள் & சித்தர் பாடல்கள் : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும் பாடல், சொல் தேடலும் மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்க எண் தேடலும் உள்ளன. இவை போல் பிறவும் சீர்மையற்று உள்ளமையைப் பின்வரும்அட்டவணை உணர்த்தும்.
அட்டவணை – 05
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டுப் பகுதியில்
திருச்செந்தூரக் கந்தர் கலிவெண்பா
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணி மாலை
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர செய்யுட்கோவை
பண்டார மும்மணிக்கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
ஆகியன உள்ளன. இங்கே குறிப்பிட்டுள்ள விவரம் அனைத்திற்கும் பொருந்தும்.
சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டுப் பகுதியில்
சோணசைல மாலை
நால்வர் நான்மணி மாலை
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
பழமலையந்தாதி
பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
பெரியநாயகியம்மை கலித்துறை
நன்னெறி
திருவெங்கைக் கோவை
திருவெங்கைக் கலம்பகம்
திருவெங்கையுலா
இட்டலிங்க அபிடேக மாலை
நெடுங்கழி நெடில்
குறுங்கழி நெடில்
நிரஞ்சன மாலை
கைத்தல மாலை
சிவநாம மகிமை
சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதூது
சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி
சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
இட்டலிங்க வகவல்
திருவெங்கை மான்மியம்
ஆகியன உள்ளன. இங்கே குறிப்பிட்டுள்ள விவரம் அனைத்திற்கும் பொருந்தும்.
தமிழ் விடு தூது ஆசிரியர் பெயர் யாரும் அறியப்படாததாக உள்ளது. ஆனால், இதில் தி.சங்குப்புலவர் என உரையாசிரியர் பெயரைத் தவறாகக் குறித்துள்ளனர். இது போன்ற தவறுகளை நீக்கிச் செம்மை செய்ய தஇஇக முயல வேண்டும்.
நெறி நூல்கள்
மூலமும் உரையும் இணைந்த பகுதி உள்ளது. அதன் பக்கங்களில் தலைப்பில் உள்ள தேடுதல் பகுதி மூலம் சொல் தேடுதல் மட்டும் உள்ளது.
நீதி நூலில் மட்டும் அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் மட்டும் உள்ளது.
இவற்றை ஒத்து அமைந்தள்ள சித்தர்பாடல்களும் இவ்வட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
(தேடுதல் தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply