56veirilaiural

தேவதானப்பட்டிப் பகுதியில்

பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்லும்

வெற்றிலை உரல்கள்  

  தேவதானப்பட்டிப் பகுதியில் வெற்றிலை பாக்கு இடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உரல்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்பப்பட்டு வருகின்றன.

  தேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வெற்றிலை, புகையிலை பயன்படுத்துபவர்கள் மிகுதியாக இருந்தனர். இதில் வயதானவர்கள் பல் இல்லாமல் இருந்தால் உரல் மற்றும் எச்சில் துப்புவதற்காகப் படிக்கம் என்ற கோளாம்பியைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரலில் வெற்றிலை, சுண்ணாம்பு, தேவையான அளவு பாக்குகளை வைத்து அதனைக் குத்தி அதன்பின்னர் தங்கள் வாயில் போட்டு மெல்லுவார்கள். அதன்பின்னர் வரும் எச்சிலைக் கோளாம்பியில் துப்பி வெளியே கழுவுவது வழக்கம்.

 தற்பொழுது வெற்றிலை, பாக்கு பயன்படுத்துபவர்கள் மிகக்குறைந்துள்ளனர். மேலும் வெற்றிலை, பாக்கு பயன்படுத்திய முதியவர்கள் ஆயத்தமாக உள்ள ‘பான்பராக்கு, குட்கா, கணேசு அன்சு’ போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் வெற்றிலை இடிப்பதற்கு பயன்படுத்திய உரல்களைப் பெரும்பாலானோர் பழைய இரும்புப் பொருள்கடைகளுக்கு விற்றுவிட்டனர். சிலர் தங்கள் வீட்டில் உள்ள மூதாதையர்கள் நினைவிற்காக வைத்துள்ளனர்.

தற்பொழுது தேநீர்க்கடைகளில் இந்த உரலை இஞ்சித் தேநீர் போடுதவற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

வரலாற்றில் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பொருட்களில் இந்த உரலையும் சேர்த்துக்கொள்ளவேண்டிய காலத்திற்கு உட்படுத்திவிட்டோம்.

 56vaigaianeesu_name