(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 146 – 164 இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 165- 174

165. இனத்திரள்   Population என்னும் சொல்லிற்குத் தமிழில் குடித்தொகை, சனத்தொகை, மக்கள் தொகை, இனத்திரள், இனத்தொகுதி, இனத்தொகை, உயிரினத் திரள், முழுமைத் தொகுதி, மக்கள் திரள், உயிரியத் தொகை, உயிரினம், குழு எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். populatio என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் மக்கள், கூட்டம் என்பதாகும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு(Census) என நாம் குறிப்பிடுவதில் மக்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கெடுக்கப் படுவதில்லை. குடி மக்களின் பிற விவரங்களும் கால் நடை, பிற விலங்குகள், ஊர்திகள் முதலானவற்றின் விவரங்களும் கணக்கெடுக்கப்படுகின்றன. பொதுவாக Population என்பது குமுகவியலில் மக்கள் தொகையையும் பயிரியலில் இனப்பெருக்கத் திறன் கொண்ட உயிரினத் தொகையையும் குறிக்கின்றது. எனவே, நாம் இரண்டிற்கும் பொருந்தும் வகையில் Population இனத்தொகை எனலாமா எனக் கருதிப் பார்த்தேன். ஆனால், இனத்திரள் என்பது பெருவாரியாகக் கையாளப் பட்டுள்ளது. இவற்றை மாற்றத் தேவையில்லை. எனவே, Population  – இனத்திரள் எனலாம்.Population
166. இனத்திரள் வளைசலியல்    Population Ecology
167. இனத்திரள் இயங்கியல்Population Dynamics
168. இனத்திரள் மரபியல் Population Genetics
169. இனத் தொடர்பியல் Synoecology(2) என்பதற்கும் சூழியலுக்கும் தொடர்பில்லை.  இனங்கள் இடையிலான தொடர்புகளைப் பற்றிய அறிவியல் இது. எனவே, இனத் தொடர்பியல் – Synoecology(2) எனப்படுகிறது.Synoecology(2)  
170. இனப்பெருக்க வினையியல்Reproductive Physiology
171. இனப் பெருக்கவியல்Genesiology
172. இனமரபு முறைமையியல்/ கிளைப்பாட்டியல்   Phylogenetic systematics-என்பது மரபுவழி வகைபாட்டியல் எனப்படுகிறது. Phylogenetic – தொகுதி வழி, மரபுவழிசார், மூலத்தொகுப்பிசார், மூலத் தொகுப்பியல், மூலத் தொகுப்பியல் சாதி வரலாற்றுக்குரிய எனப் பல வகையாகக் கூறப்படுகின்றது. Phylo என்பது இனம், பழங்குடி, குலம் முதலியவற்றைக் குறிக்கிறது. எனவே, Phylogenetic என்பதை இனமரபு எனலாம். வகை(ப்)பாட்டியல் இங்கே பொருந்தாது. systematics – முறைமையியல் என வரையறுத்துள்ளோம்.  ஆதலின் இனமரபு முறைமையியல் –  Phylogenetic systematics எனலாம். விலங்கினப் பகுப்பியல் ஆகிய இதனைக் கிளைப்பாட்டியல் –  Cladistics என்றும் சொல்வர்.Phylogenetic systematics/ Cladistics
173. இனவியல்  Raciology சொல்லின் பொருளாக, இனப் பண் பாட்டியல், மாந்த இனவியல், இன ஒப்பாய்வியல், இன அறிவியல், இன விளக்கவியல், இன விளக்க இயல், இனக் குழுமவியல், இனக் குழுவியல், இனப் பண்பாட்டுயல், இன மரபியல், இனவியல், மக்கட்பாகுபாட்டியல் எனப் பலவகையாக அகராதிகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் இனப் பண்பாட்டுயல் என்பது உளதாதல்/வாழ்தல் பொருள் கொண்ட உயல் என்பதைத்தான் பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. அச்சுப்பிழையாக இருக்கவே வாய்ப்புள்ளது. மக்கள் பாகுபாட்டியல் என்பது இனவகைப்பாட்டின் அடிப்படையில் சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக எல்லாமே  ஒரு பொருளுடைத்து. இவற்றுள் இனவியல் என்பது சுருக்கமாக உள்ளது. Ethno என்பது கிரேக்கச் சொல்.  ace என்பது பிறமொழி வழிவந்த இடைக்கால ஆங்கிலச் சொல். Ethnology – இன அமைப்பு, இன ஒப்பாய்வியல்,  இனவியல், இனக் குழுமவியல், இனக் குழுவியல், இன மரபியல், இன விளக்கவியல், இனப் பண்பாட்டு இயல்,  இனப் பண்பாட்டியல், இன அறிவியல், மக்களின நூல் ஆராய்ச்சி, மக்களின விளக்கநூல், மாந்த இனவியல், மாந்தக்குடி விளக்கநூல், மக்கட் பாகுபாட்டியல், மக்கள் இன விளக்க நூல், மனித இன ஆராய்ச்சி, மனிதப் பண்பாட்டு இயல், மனித இன வேறுபாடுகளை விளக்கும் துறை, மனிதப் பண்பாட்டியல், மனிதரியல் எனப் பலவகையாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு சொல்லைக் கையாண்டால் தனித்தனித் துறையாகக் கருதுவர். எனவே, சுருங்கிய சொல்லான இனவியல் – Ethnology என்பதையே பயன்படுத்துவோம்.Ethnology / Raciology  
174. இன வேறுபாட்டுளவியல்Ethnopsychology

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000