உவகைதரும் உரையாசிரியர்களின் நடை – தெ.பொ.மீ.
உவகைதரும் உரையாசிரியர்களின் நடை
இறையனார் அகப்பொருள் உரை ஒரு சிறந்த உரைநடைநூல். சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதோடு சோலை முதலியவற்றைப் பற்றிய புனைந்துரையும் அன்பு முதலியவை பற்றிய தத்துவ விளக்கமும் அங்கு உண்டு. ஆனால், அங்குப் பாட்டு நடை காதில் கேட்காமல் இல்லை. எதுகை மோனைகள் அளவுக்கு மீறி இன்பமூட்டுகின்றன…
தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியரான இளம்பூரணரின் நடை எளிமை வாய்ந்தது. சேனாவரையரின் இலக்கணவுரையில் புனைந்து கூற மிகுந்த இடம் இல்லையாயினும் அவரது நடையில் மிகுந்த பொலிவும் புனைவும் இடம்பெறுகின்றன. திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகர் நடைதெளிவாக இருப்பினும் செறிவுமிக்கது. பேராசிரியரின் நடை பெருமிதமானது. நச்சினார்க்கினியர் கருத்து வெளிப்பாட்டில் தம்மை மறந்து ஆரவாரமற்ற நடையில் எழுதுகின்றார்.
-பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம்:
நீங்களும் சுவையுங்கள்: பக்கம்.195-196
Leave a Reply