ஒலி பெயர்ப்புச் சொற்கள்

தொகுதி (1)

பிற மொழி எழுத்துக்கலப்பின்றித் தமிழில் எழுதப்படுவனவே தமிழாகும். ஆதலின் ஒலி பெயர்ப்புச்சொற்களிலும் பிற மொழி எழுத்துகளைக் கலக்கக் கூடாது.

சிலர் அவ்வாறு எழுதினால் இனிமை இருக்காது என்பர். உண்மையில் அயல்மொழி எழுத்துகளை அம்மொழி ஒலிக்கேற்ப எழுதுவதுதான் இனிமை தராது. ஆட் பெயர்கள், இடப்பெயர்கள் முதலானவற்றிற்குத்தான் ஒலி பெயர்ப்பு தேவை. பிற மொழியினர் தத்தம் மொழி ஒலிக்கேற்பத்தான் பிற மொழிகளைப் பலுக்குகின்றனர். நாம்தான் மேதையாக எண்ணிக் கொண்டு மொழிக்கொலை செய்கிறோம்.

கிரந்தஎழுத்துகளைப்பயன்படுத்தி அயல் மொழி எழுத்துகளை எழுத வேண்டும் என்பர் சிலர். அவர்கள் தத்தம் கருத்துகளைத் தங்களோடு வைத்துக் கொள்ளட்டும்.இதில் கலக்க வேண்டா.

தமிழர்வம் மிக்க சிலர் “இந்தச் சொல்லை அந்த மொழியில் இவ்வாறு குறிப்பிடுவர். நாமும் அவ்வாறு குறிப்பிடலாம்” என்பர். ஒரு மொழிச்சொல்லைப் பிற மொழியினர் எவ்வாறு குறிப்பிட்டாலும் நாம் நம் மொழிக்கேற்பவே குறிப்பிட வேண்டும்

பிற மொழிச்சொற்கள் அந்தந்த மொழிகளில் எவ்வாறு ஒலிக்கப்படுகின்றன என அறிந்து அம்முறை தமிழ் மரபிற்கேற்ப இருந்தால் அவ்வாறே பின்பற்றியும் இல்லையேல் தமிழ் மரபிற்கேற்பவும் ஒலி பெயர்ப்பு தரப்பட்டுள்ளன.

எழுத்துகள் அவை பிறக்கும் இடத்திற்கேற்பவே வரிசை முறை பெற்றுள்ளன. அவ்வாறு ஒலிக்கும் பொழுதுதான் சொற்கள் இனிமையாகவும் எளிமையாகவும் இருக்கும். அவ்வாறில்லாத நேர்வுகளில் அவ்வெழுத்துகள் அடுத்தடுத்து அமையா வண்ணம் நம் முன்னோர் இலக்கணம் வகுத்துள்ளனர். எனவேதான் மெய்ம்மயக்கம் என்று தனியாக இவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் நான் ‘ஒலிபெயர்ப்பு வழிகாட்டியும் ஒலிபெயர்ப்பு திரு விதிகளும்’ எனக் கட்டுரை எழுதியுள்ளேன். வெருளி அறிவியல் நூலில் இடம் பெற்றுள்ள ஒலிபெயர்ப்புச் சொற்கள் பட்டியல் நிறைவுற்றதும் அவற்றை வெளியிடுவேன். இக்கட்டுரை மொழிக்கலப்பின்றி எழுதுவதற்கு உலகத்தமிழர்களுக்குத் தக்க வழிகாட்டியாக அமையும்.

 

  1. இங்குவார் காம்பிரடு – Ingvar Kamprad
  2. எலிம்தியார்டு – Elmtaryd
  3. அகுன்னாரைடு – Agunnaryd
  4. (இசு)கிட்டில் – Skittle
  5. (தூயர்) பால் – (‎Saint) Paul
  6. (புது) ஆம்சயர் – (New) Hampshire
  7. (புது) செருசி – (New) Jersey
  8. (புது) யார்க்கு – (New) York
  9. (மேற்கு) விர்சினியா – (West)Virginia
  10. (வட ) கரோலினா – (North) Carolina
  11. (வட) உலூசன் – (North) Luzon 
  12. (வட) தகோட்டா – (North) Dakota
  13. (வயவர்) பிரெடு ஒயில் – (Sir)  Fred Hoyle
  14. ஒசிரிசு – Osiris
  15. அலாசுகா – Alaska
  16. போசுனா – Bosna
  17. வாலூன் – Walloon
  18. ஃபலூக்கெ தரமோலா – Foluke daramola
  19. ஃபிராங்குபோருட்டு – Frankfort
  20. ஃபிரான்கென்சுடைன் – Frankenstein
  21. ஃபிரான்சின் – Francine
  22. ஃபிரிசில் – ஃபிரிசில்
  23. ஃபிரெடி கெரூகெர் – Freddy Krueger
  24. ஃபெரென் வாற்றர் – Fernwalter
  25. ஃபோருடு – Ford
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்