ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1321-1330)-இலக்குவனார் திருவள்ளுவன்
[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1311-1320) தொடர்ச்சி]
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
133. ஊடலுவகை
(ஊடலில் மகிழ்தல்)
- தவறில்லாத பொழுதும் ஊடுதல் அன்பு செலுத்தச் செய்கிறது.(1321)
- ஊடல் தரும் சிறு துன்பம் மகிழத்தக்கது. (1322)
- நிலமும் நீரும் கலந்தாற்போன்றவருடன் ஊடுதல் தேவருலகத்தினும் இன்பமாகும். (1323)
- தழுவு நேர ஊடலில் உள்ளம் உடைக்கும் படை உள்ளது. (1324)
- தவறிலில்லையாயினும் ஊடலால் தோள் பிரிகையிலும் இன்பம் உள்ளது.(1325)
- உண்டலில் செரித்தல் இனிது; கூடலினும் ஊடல் இனிது. (1326)
- ஊடலில் தோற்பவர் வெல்வதைக் கூடலில் காணலாம். (1327)
- நெற்றி வியர்க்கக் கூடிய இன்பத்தை மீண்டும் ஊடிப் பெறுவோமா? (1328)
- அவள் ஊடல் தாெடரட்டும். அதைத்தணிக்கும் என் கெஞ்சலுக்காக இரவு நீளட்டும்!(1329)
- ஊடல் இன்பம். அதன் பின் கூடுதல் ஊடலுக்கு இன்பம்.(1330)
நிறைவு
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply