கலைச்சொல் தெளிவோம் -17 : சுரியலும் செதுவும்–Curl and Shrink
17 சுரியலும் செதுவும்–Curl and Shrink
சுரியல்(௫):
சுரியலம் சென்னிப் பூஞ்செய் கண்ணி (பதிற்றுப்பத்து ௨௭.௪)
அரியல் வான்குழல் சுரியல் தங்க (புறநானூறு ௩௦௭.௬)
இவற்றுள் சுரியல் என முடிச் சுருள் குறிக்கப் பெறுகின்றது. இலைச்சுருளைக் குறிக்க leaf curl – இலைச் சுருக்கு (வேளா.) என்கின்றனர். சுருக்கு என்று சொல்வதைவிடச் சுரியல் என்பது மிகப் பொருத்தமாக அமைகிறது.
இலைச்சுரியல் – leaf curl
shrink என்பதும் சுருக்கு (வேளா., பொறி., மனை., கால்.) என்றே சொல்லப்படுகின்றது.
கூர்மை, ஒளி முதலியன மழுங்குவதும் (get blunt, lose brightness, dim) ஒடுங்குவதும், சுருங்குவதும் செது(4) எனச் சொல்லப்பட்டுள்ளது.
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர (புறநானூறு ௨௬௧.9)
என ஒளி மழுங்கிய கண் குறிக்கப்பட்டுள்ளது. எனவே,
செது – shrink எனலாம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply