கலைச்சொல் தெளிவோம் 19: காழ்நீர் –coffee
தேயிலையிலிருந்து ஆக்கும் நீரைத் தேநீர் எனச் சுவையாகச் சொல்கிறோம். ஆனால் காப்பி(coffee) என்பதற்கான சரியான சொல் வழக்கில் வராமையால் காப்பி என்பதே நிலைக்கிறது. காப்பிக் கொட்டையில் இருந்து உருவாக்குவதால் கொட்டை வடிநீர் எனச் சொல்லப்பட்டது வேறு வகையாகத் தோன்றி மக்கள் நாவில் இடம்பெறவில்லை.
கன்றின் குளம்படி போன்று உள்ளதால் காப்பி எனப் பெயர் பெற்ற மூலச் சொல் அடிப்படையில் குளம்பி எனச் சொல்லப்பட்டதும் இதனால் குழம்பிப் போவதாகக் கூறிப் பயன்பாட்டுத் தன்மையை இழந்துள்ளது.
காழ் எனில் கொட்டை எனப் பொருள். காழ்(115)அரைக்கப்பட்டுப் பெறப்படும் தூளில் இருந்து உருவாக்கப்படும் சுவை நீரைக் காழ்நீர் என்று சொல்லலாம். தீஞ்சுவையுடைய நீர் தீம்நீர் > தீநீர் என்றும் சொல்லலாம். ஆனால், தவறான பொருள் கொள்ளாத வகையில் இப்பொருளைப் புரிந்து யாவரும் பயன்படுத்தினால் தேநீர், தீ நீர் என்னும் சொல்லிசை முறையால் இச்சொல்லே
காழ்நீர்/ தீநீர் –காப்பி(coffee)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply