கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில்- cuisine
அட்டில்- cuisine
தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம்.
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறுபாண் ஆற்றுப்படை 132
அறம்நிலைஇய அகன்அட்டில் – பட்டினப் பாலை 43
விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில் – பட்டினப் பாலை 262
அட்டில் ஓலை தொட்டனன் நின்மே –நற்றிணை 300.12
உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து – அகநானூறு 168.7
சிறுபாணாற்றுப்படை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றிலும் அட்டில் கையாளப்பட்டுள்ளது. அட்டில்(cuisine) என்பது சமையல் முறையையும் குறிக்கும்
எனவே,
சமையலறை- kitchen
அட்டில்- cuisine என வேறுபடுத்தலாம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply