சுந்தரமூர்த்தி கவிதைகள்

சிலேடை  அணி 7

ஆசானும் நன்னீரும்

தாகத்தைத் தீர்க்கும், தடுமாற்றம் போக்கிடும்,
பாகத்தான் மேலே பரந்தோடும்.-பாகாக்கும்
தெள்ளிய தூய்மைக்கும்,தேயமுய்யும் ஓங்கலுக்கும் ,
பள்ளியனும் நன்னீரும் ஒன்று.

பொருள்:

ஆசிரியர்:
1)மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்ப்பார்.
2)மாணவர்தம் அறியாமையால் ஏற்படும் தடுமாற்றம்  தீர்க்கப்படுகிறது.
3)ஈசனும் ஆசானே.அவன் உடல் உள்ளத்தின் மேல் கல்வி பரந்தோடுகிறது.
4)ஆசிரியர்  ஒவ்வொருவரையும் பாகாக்கும் வல்லமை உடையவர் இனிமையான பேச்சைக் கொண்டவராக்கும் திறமை பெற்றவர்.அருந்தமிழ்ப் பாக்களைக் காக்கும் பண்புள்ளவராகவும் உள்ளார்.
5) ஆசிரியர் தீயன களைந்து மாணவர்களைத் தூய்மையாக்குகிறார்
6)உலகம் ஓங்கவும் ஆசிரியர் காரணமானவர்.
நன்னீர்:

1) தாகத்தைத் தீர்க்கிறது.
2) தாகம் ஏற்பட்ட சற்றுநேரத்தில் நீரை அருந்திவிட்டால் தடுமாற்றம் போக்கப்படுகிறது.
3) ஈசனார் மேலே தூயகங்கை ஓடுகிறது.
4) தாக வேட்கையுடையவனுக்குத் தாமதமாக அரிதாகக் கிடைக்கும் நீர் பாகைப் போன்று காணப்படுகிறது.
5) மனிதனின் உடலைமட்டு மல்ல உலகையே தூய்மைப் படுத்துகிறது.
6) உலகம் ஓங்கக் காரணமாக நீர் இருக்கின்றது.

கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி

கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி