சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 493-504
(தமிழ்ச்சொல்லாக்கம்: 486-492 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 493-504
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
493. Wrist Watch – மணிக்கட்டு கெடியாரம்
நல்லொழுக்கம் நாட்டிலில்லை. சூதே சொந்தமாயிற்று. வாதே வழக்கமாயிற்று. தீதே தேடலாயிற்று சட்டையுடன் சாப்பிடுதலே சகசமாயிற்று. அரைக்கை சட்டை அபரிமிதமாயிற்று. மணிக்கட்டு கெடியாரமே (ரிசுட்டுவாச்சே /Wrist Watch) பெசுட்வாச் (Best Watch)சாயிற்று.
நூல் : தமிழ்க் கல்வி (1924) பக்கம் 66
நூலாசிரியர் : மனத்தட்டை எசு. துரைசாமி ஐயர்
494. அவகாசம் – இயைந்த காலம்
495. அவதரித்தல் – பிறத்தல்
496. ஆராதனை – வழிபாடு
497. வாகனம் – ஊர்தி
498. சரசுவதி – சொற்கிறைவி
499. சரசுவதி – பனுவலாட்டி
500. இரத்தம் – புண்ணீர்
501. பிரசவ வீடு – மகப்பெறும் இல்லம்
502. விவாகச் செயல் – மணவினை
503. விவாகச் சிறப்பு – மணவிழா
504. ஆகாய வாணி – விட்புலச் சொல்
நூல் : உதயன சரிதம் (1924) மொழி பெயர்ப்பு : பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply