தலைப்பு-செங்குட்டுவன் இருப்பின், சி.இலக்குவனார் :thalaippu_senguttuvanpoandrasemmalgal_s.ilakkuvanar

செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா?

  கல்வியும் செல்வமும் உடைய தமிழர்கள் தாமுண்டு தம்வாழ்வுண்டு என்று கூற்றுவனுக்கு நாளோட்டுகின்றனரேயன்றித் தமிழினப் பெருமையை எண்ணிச் செயலாற்றும் இயல்பைப் பெற்றிலர். அன்று வாய்வாளாண்மையின் வண்டமிழ் இகழ்ந்த வடவரை அடக்க வலிதிற் சென்ற செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் ஆரியர்கள் வரும் முன்னர் தென்னிந்தியா வளமுற்றிருந்தது என்பதற்கோ நாகரிகச் சிறப்புடன் சிறந்தது என்பதற்கோ இதுவரை சான்று கிடையாது என்று கூறுவார்களா? கி,மு,ஏழாம் நூற்றண்டினது எனக் கருதப்படும் தொல்காப்பியமும் தொல்காப்பியத்திற்கு முன்பானவை என எண்ணப்படும் சங்க இலக்கியப் பாடல்களும் ஆரியர்வருகைக்கு முன்னர் தமிழர் பெற்றிருந்த நாகரிகப்பண்பாட்டுச் சிறப்பை நனிவிளக்கு மன்றோ?

பேராசிரியர் சி.இலக்குவனார்