http://www.akaramuthala.in/wp-content/uploads/2015/06/83tha.uri_.sa_._thalaippu.jpg

5

கடமை ஆற்றுவோர் ஒருபுறம்! கடமை தவறி அலைக்கழிப்போர் மறுபுறம்!

பேரூராட்சிச் செயல் அலுவலர்கள் செயல்பாடுகள்

    நாம் கேட்கக்கூடிய தகவலைத் தருவற்கு மாற்றாக தகவல் தர மறுப்பதற்குச் சில பிரிவுகளை வைத்துள்ளனர். அந்தப்பிரிவில் ஒன்றான “8(1) என்ற பிரிவின் கீழ் தகவல் தர இயலாது” எனக்காரணம் கூறித் தப்பித்துவிடுகின்றனர்.

  பிரிவு8(1)( ஒ) [8(1)(j)] : தனிப்பட்ட ஒருவரைக் குறித்து நாம் கேட்கும் தகவல், பொதுச்செயல்பாடு அல்லது பொது நலனுக்காக எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில் உள்ள தகவலாக இருப்பின் அல்லது ஒரு தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையின்றித் ததலையிடுவதாக இருந்தால் அப்படிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு இப்பிரிவு தடை செய்கிறது.

  ஆனால் மேற்கண்ட அந்தத் தனிப்பட்டவர் குறித்த தகவலை வெளியிடுவதால் அதில் பொதுநலன் அதிகமாக உள்ளது எனத் தொடர்புடைய பொதுத்தகவல் அலுவலர் அல்லது மேல்முறையீட்டு அலுவலர் கருதினால் அல்லது மன நிறைவு அடைந்தால் அந்தத் தகவலை வெளியிடலாம்.

  இதனைத் தகர்க்கும் வகையில் பிரிவு 8(2) அமைந்துள்ளது என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

  பிரிவு 8(2) :1923 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு இப்போதும் நடைமுறையில் உள்ள அலுவலக மறைபொருள்(இரகசியங்கள்) அல்லது அலுவலகக் காப்புச்சட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 8(1) ஆகியவற்றின்படி சட்டப்படியான விதிவிலக்குகள் இருக்கின்ற என்றாலும், மேற்படி தகவலை வெளியிடுவதால் ஏற்படும் பொதுநலன், பாதுகாக்கப்பட்ட நலன்களுக்கு உண்டாக்கும் தீங்கைவிட உயர்வாக அல்லது கூடுதலாக இருக்குமானால் பொதுத்தகவல் அலுவலர் அந்தத் தகவலை வழங்கவேண்டும். தகவலை மறைக்க கூடாது எனக்கூறுகிறது.

  நாம் திட்டச்சேரி பேரூராட்சிப்பகுதியில் உள்ள ஓர் ஆளின் இல்ல விவரம், அவர் ஆண்டுதோறும் வீட்டு வரி செலுத்தி வரும் விவரம், அவர் எந்த ஆண்டு முதற்கொண்டு வீட்டு வரி செலுத்துகிறார் எனத் தகவல்களைக் கேட்டு இருந்தோம்.

2.மேலே கூறப்பட்டுள்ள ஆள் திட்டச்சேரி பேரூராட்சியில் தொடர்ந்து வரி செலுத்தி வருகிறாரா என்ற தகவலையும் வரிச்சீட்டில் குறிக்கப்படும் பெயரையும் தகவலாகக் கேட்டு இருந்தோம்.

3.மேலே கூறப்பட்டுளள் ஆள் பேரூராட்சி குடிநீர் குழாய் வரிச்சீட்டில் குறித்துள்ள பெயரைத் தகவலாக தெரிவிக்க வேண்டும் எனவும்

 அதற்கு நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி முறையான தகவலை அளித்தது.

  இதே போன்று திருவாரூர் மாவட்டம்,  முத்துப்பேட்டை பேரூராட்சி-சமாலியா தெரு-கதவு எண் 2-5, ஆநா.நெநா. இல்லத்தில் வசித்து வந்த செபருல்லா மகன் சாகுல் அமீது என்பவர் மீது நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அவருக்குப் பிடியாணை உள்ளது. திருவாரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி இத்தகவல் கிடைத்தது. இத்தகவலை வைத்து அவருடைய வீட்டு விவரம், முகவரி தொடர்பாகத் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியில் வீட்டுவரி, குழாய் வரி விவரங்கள், குழாய் வரிச் செலுத்துச் சீட்டில் உள்ள பெயர், வீட்டு வரிச்சீட்டில் உள்ள பெயர், ஆண்டுதோறும் வீட்டுவரி செலுத்துகிறாரா முதலான தகவல்களைக் கேட்டோம்.

  அதற்கு முத்துப்பேட்டை பேரூராட்சிச் செயல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 தகவல் பிரிவு 8(1) எ-இன்படித் தாங்கள் கோரியுள்ள விவரங்களுக்குத் தகவல் வழங்க வழிவகை இல்லை என மறுமொழி அளித்துள்ளார். .

நாகப்பட்டினம் மாவட்டமும், திருவாரூர் மாவட்டமும் அருகருகே உள்ள மாவட்டம் ஒரு பேரூராட்சியில் தகவலை கொடுத்துக் கடமையாற்றுகின்றனர். மற்றொரு பேரூராட்சியில் தகவலை மறைத்து அலைக்கழிப்பு செய்கிறார் செயல் அலுவலர்.

87muthupettai_e.p.reply 87muthupettai_townpanchayathu_E.O.information 87thiruvarur_add.sp.reply 87thiruvarur_s.p.-information

(தொடரும்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2015/06/83vaigaianeesu_name-300x188.jpg