செயமங்கலம்: தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்

செயமங்கலம் பகுதியில் தீப்பற்றி எரியும்  மின்மாற்றிகள்   தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில்  மின்மாற்றி எரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் வழியில்  மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி  அருகே கயிறு தொழிற்சாலை,  கன்னெய்(பெட்ரோல்) நிலையம் உள்ளன.  கடந்தவாரம் ஒருநாள் 12 மணியளவில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இத்தீயின் புகையைக் கண்டவுடன்  கன்னெய் நிலைய ஊழியர்களும், கயிற்றுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும் அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறைக்கும்   தொலைபேசி வழித் …

குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்

குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்   தேவதானப்பட்டி அருகே உள்ள தே.வாடிப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஊராட்சியில் வரும் தண்ணீரைப் பிடித்து குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குற்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு கல்அடைப்பு, சிறுநீரகக் கோளாறு முதலான நோவுகள் அடிக்கடி ஏற்பட்டு அதற்கான மருத்துவமும் பார்த்து வருகின்றனர்.   இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு,…

செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்! – வைகை அனீசு

செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர் தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில் கண்மாய் கரை உடைந்து குளத்திற்குச் செல்லும் தண்ணீர் வீணாகிறது. செயமங்கலம் அருகே உள்ள கண்மாய்க்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்பொழுது பெய்த கனமழையால் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களுக்குச் சென்றது. வயல்களில் ஏற்கெனவே நெல்களை நடுவதற்கு  உழவர்கள் நெற்பயிரைப் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கரை உடைந்ததால் நெற்பயிர்களுக்குள் தண்ணீர் உள்ளே சென்று அனைத்தும் வீணாயின.   அதே போல கண்மாயில் மீன்குஞ்சுகளை வளர்த்து வந்தனர். இதனால் குளத்திலிருந்து…

அரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை!

முதலக்கம்பட்டி ஊராட்சியில் அரசால் வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை  தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் முறையிடுகின்றனர்  முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி…

நாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு

அறிவியலுக்கு அறைகூவலிடும் நாட்டுப்புற நம்பிக்கைகளும்  சிதைக்கப்பட்டு வரும் மொட்டைக்கோபுரமும்   நாட்டுப்புற மக்களிடம் எண்ணற்ற நம்பிக்கைள் காணப்படுகின்றன. அனைத்தும் அறிவியல் சார்ந்தது எனக்கூறமுடியாது. இருப்பினும் பல நம்பிக்கைகள் அறிவியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தாங்கள் அன்றாடம் வாழ்க்கையில் கண்ட சில கூறுகளை வைத்துக் காலத்தையும் நேரத்தையும் திசைகளையும் கணித்தனர். மழை, வெள்ளம், பனி, மின்னல், பூக்கள் பூப்பது, விலங்குகள் கத்துவது, பறவைகளின் ஒலி, முகில், காற்று, புயல் என வானவியல் முதலான அனைத்தையும் ஏதோ ஓர் அடிப்படையில் கணித்திருந்தார்கள். . அந்தக் கணிப்பு…

துலுக்கப்பயலே! 7 -வைகை அனிசு

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி)  7    துலுக்கரை நினைவுபடுத்தும் ஊர்களின் பெயர்கள்   தேனி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி என்ற பொம்மிநாயக்கன்பட்டியும், இராமநாதபுரத்தில் துலுக்கபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கபட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துலுக்கனூர், மேலத்துலுக்கன் குளம், துளுக்கங்குப்பம், அருப்புக்கோட்டைப்பகுதியில் துலுக்கன் குளம், முதுகுளத்தூர் வட்டத்தில் துலுக்கன்குறிச்சி, அவிநாசி வட்டத்தில் துலுக்கன்முத்து, காஞ்சிபுரம் வட்டத்தில் துலுக்க தண்டலம், என ஊர்கள் உள்ளன. துலுக்க பசலை என்ற கீரையும், துலுக்க மல்லிகை என்ற மல்லிகைப்பூவும் உள்ளன. துலுக்க மல்லிகைப்பூவை இந்துக்கள்…

உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்

உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்   உலகமயமாக்கலின் அதிவேகமான நடைமுறைப்படுத்தலில் பண்டைய மரபுகள், குழுஇனங்காணுதல், அடையாளப்படுதல் ஆகியன மறைந்து போய் ஒரே பண்பாட்டுத்துறை நடைமுறையிலாகிவிடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாட்டுப்புறவியல் என்பது மீள் விளக்கம் செய்யப்படவேண்டும் என்னும் கருத்து வேகமாகப் பரவிவருகின்றது. புதிய குடியேற்ற ஆதிக்கத்தின் விளைவைக் குமுகாயத்தில் கண்டறிந்து எதிர்விளையாற்றவேண்டிய காலத்தின் கட்டாயம் நாட்டுப்புறவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியானது குறிப்பிட்ட அளவு மக்கள் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பாதித்திருக்கிறது.   சிற்றூர்கள் அழிந்து நகரங்களாக மாறிவருகின்றன. விளைநிலங்கள், ஏரிகள்,…

துலுக்கப்பயலே! 6 -வைகை அனிசு

(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 தொடர்ச்சி) 6 பழமை மாறாத இந்து மரபைப் பின்பற்றும் இசுலாமியர்கள்    சமயம் மாறினாலும் இந்துக்கோட்பாட்டின் படி இந்துக்கள் செய்கின்ற சடங்குகளை இன்றளவும் இசுலாமியர்கள் செய்துவருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலத்தெய்வம் இருப்பது போல இசுலாம் மார்க்கத்திற்கு வந்தவர்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்த சடங்குகள் போல மாயாண்டி துணை, கருப்பாயி துணை, எடமலையான் துணை, பதினெட்டாம்பட்டியான் துணை, காமாட்சியம்மன் துணை என்றெல்லாம் ஏகப்பட்ட குட்டித் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.  இந்துக்கள்,  இதே போன்று …

துலுக்கப்பயலே! 5 – வைகை அனிசு

(அகரமுதல 97, புரட்டாசி 3, 2046 / செப். 20, 2015 தொடர்ச்சி) 5 இராவுத்தர் கோயில்   தஞ்சாவூர் அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பாதிரங்கோட்டை என்ற ஊர். அங்கு இராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் நுழைவு வாயிலில் எட்டடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரைச் சிலையும், அதன் அருகில் ஐயனார் சிலையும் உள்ளன. கையில் பெரிய வீச்சரிவாள், பெரிய மீசை பயமுறுத்தும் கண்களுடன் ஐயனார் காட்சியளிக்கிறார்.   ஐயனார் சிலையின் தலையில் முசுலிம்கள் அணியும் குல்லா உள்ளது. இவரைப் பெரிய இராவுத்தர்…

சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்

 சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000  கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்     தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…

கேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு

பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு!  பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால் அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால்…

துலுக்கப்பயலே! 4 -வைகை அனிசு

(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 4 தமிழகத்தில் முசுலிம்களும் பிரிவுகளும்   கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்த இசுலாமிய மார்க்க ஞானி நத்தகர் காலத்தில் இருந்த கல்வெட்டுகள், நூல்கள் போன்றவற்றில் அஞ்சுவண்ணத்தார், சோனகன், முகமதியர் எனப் பலபெயர்களில் இசுலாமியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.   தமிழக அரசு ஆணையின்படி (இ)லெப்பை, தக்கினி, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, காக்கா, சேட்டு, சையது, சேக்கு, பீர், தாவூது, அன்சார், நவாபபு என முசுலிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கெனவே உள்னர்.(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…

1 2 10