தமிழரை ஆரியர்கள் தலைவர் என்னும் பொருளில் அசுரர் என்றனர்
ஆரியர் வருஞான்று தமிழர் அரசியல் முறை பிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் “அசுரர்’ என்று பெயரிட்டு வழங்கினார். ரிக் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் “அசுர’ என்னுஞ் சொல் “வலிய’ அல்லது “அதிகாரமுடைய’ என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழிப்பட்டு வருகிறது என்றும் “அசுரர்’ என்பதற்கு அதனால் “தலைவர்’ என்னும் பொருள் பெறப்படுகிறது என்றும் உரோமேசு சந்திரதத்தரும் இனிது விளக்கினார்.
“ஞிமிறு’ என்பது “மிஞிறு’ எனவும்
“தசை’ என்பது “சதை’ எனவும்,
“விசிறி’ என்பது “சிவிறி’ எனவும்
எழுத்து நிலைமாறி வருதல் போல் “அரசு’
என்னும் தமிழ்ச்சொல் “அசுர’ என நிலைமாறி இருக்கு வேதத்துள் வழங்கப்படுவதாயிற்று
(Compare Pandtit Saviriroyans able And Admirable Article on the Aryan Admixture with the Tamilian)
Leave a Reply