தமிழிசையாயிருந்தும் அயலிசைக்கு அடிமையாகும் தமிழ்மக்கள்!
தமிழர் வாழ்வில் நிகழும் இசைவிழாக்கள் சில
- பிள்ளைப் பேற்று விழா 2. வளைக்காப்பு விழா, 3. பிறப்பு விழா, 4. தொட்டில் ஆட்டும் விழா 5. பாலூட்டும் இசை விழா 6. சோறூட்டும் இசை (நிலாப் பாட்டு)விழா 7. ஆடை அணிவிக்கும் விழா 8. அணிகலன் அணிவிக்கும் விழா (காது குத்தல்) 9. பள்ளிக்கு வைக்கும் பாட்டிசை 10. பந்தடிப்பாட்டு, அம்மானைப் பாட்டு, கழற்சிப் பாட்டு (கழங்கு) 11. உரம் வைத்தல் (எருப் போடல்) 12. நாற்று நடுதற் பாட்டு 13. நீர் இறைத்தல் (ஏற்றப் பாட்டு) 14. கதிர் அறுத்தல் 15. போர் அடித்தல் 16. வண்டி ஓட்டல் 17. கிணறு வெட்டல் 18. புதுமனை புகுதல் 19. சுண்ணம் அடித்தல் 20. நெல்லுக்குத்தல் (வள்ளைப்பாட்டு) 21. திருமணம் நலுங்குப்பாட்டு, ஊஞ்சற் பாட்டு, மாலை மாற்றல், பழித்தல், மாப்பிள்ளைப் பழித்தல், பெண் பழித்தல், சம்பந்தி பழித்தல், வாழ்த்தல். 22. தொழில் பாட்டு: (அ) கல்லுடைத்தல் கல்லும் இசை கேட்டு நகரும் (ஏலக்கத்தா) (ஆ) கப்பற் பாட்டு கலமும் இசை கேட்டு இயங்கும் (ஐலேசா) (இ) பாம்பாட்டல் பாம்பும் இசைக் கேட்டு ஆடும் (மகுடி) (ஈ) பால் கறத்தல் பசுவும் இசை கேட்டுப் பால் சுரக்கும் (கன்றவைப் பாட்டு) 24. செத்த பிணமும் இசை கேட்கும் (ஒப்பாரி) 25. இறைவனும் இசை கேட்டு இரங்குதல் (திருவாசகம், தேவாரம், திருவாய்மொழி, திருப்புகழ் வில்லுப்பாட்டு) 26.சுடுமாசிகள் (சீட்டுக் கவிகள்) 27. விளையாட்டுப் பாட்டு; (அ) சடுகுடு, (ஆ) கவிகள் 28. கூத்து (ஆடல், பாடல், நடித்தல்) 29. பண்டிகைப்பாட்டு (காமன் பாட்டு), 30. கணியன் கூத்து 31. திருவ்பொற்சுன்னம் 32. திருக்கோத்தும்பி 33. திருச்சாழல் 34. திருப்பூவல்லி 35. திருஉந்தியார் 36. திருப்பொன்னூசல் 37. அன்னைப்பத்து 38. குயிற்பத்து 39. திருத் தசாங்கம் 40. திருபள்ளி எழுச்சி 41. திரும்புலம்பல் 42. திருப்படை எழுச்சி 43. திருத்தோனோக்கம். 44. திருத்தெள்ளேணம் (மகளிர் முரசு கொட்டல்)
ஆகியவையன்றி இன்னும் எண்ணற்ற இசைப் பாட்டுகளும் உண்டு. அவற்றில் சில அடியில் வருமாறு:
- கும்மிப்பாட்டு 2. கோலப்பாட்டு 3. ஒயில்பாட்டு 4. களவுப்பாட்டு 5. காவடிப்பாட்டு (சிந்து) 6. கல்லுளிப்பாட்டு 7. கவண்எறி பாட்டு 8. குறத்திப்பாட்டு 9. மறத்திப்பாட்டு பாலைப்பண், நண்பகள் ஆனந்தக்களிப்பு 10.இடைச்சிப்பாட்டு பல்லாண்டு 11. பள்ளுப்பாட்டு (உழத்திப்பாட்டு) உந்தி, கிளிப்பாட்டு 12.பரத்திப்பாட்டு விளரிப்பண், ஏற்பாடு 13. படையெழுச்சிப்பாட்டு வண்ணப்பாட்டு 14. கண்ணாலப்பாட்டு 15. வேந்தர் விருதுப்பாட்டு 16. கரகப்பாட்டு (நிலாவணி) 17. வாரப்பாட்டு 18. சந்தப்பாட்டு 19. கானல்வரி (கடற்கரைப் பாட்டு) (நெய்தற்பண்) 20. வேட்டுவவரி (வேட்டைப்பாட்டு) 21. ஆய்ச்சியர்குரவை முல்லைப்பண் (சாதாரி) மலைப்பாட்டு 22. குன்றக்குரவை குறிஞ்சிப்பண் (செவ்வழி) விடியல். 23. பரவர் பாட்டு கோழிப்பாட்டு 24. குரவைப்பாட்டு கூட்டப்பாட்டு
இன்னோரன்ன எண்ணற்ற பாட்டு வகைகளும் இருந்தன.
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன்:
இசையும் யாழும்: பக்கம் 22-25
Leave a Reply