தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 3
தமிழ்வழிப் பள்ளி அமைப்புகளும் பள்ளிகளும்
கல்வியாளர் வெற்றிச் செழியன்,
செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம்.
தமிழ்வழியில், தமிழிய உணர்வுடன் நடைபயின்று வருகின்றன தமிழ்வழிப் பள்ளிகள். ஒத்தக் கருத்தினால் ஒன்றுபட்டுச் செயல்படுதல், அவ்வழி தமிழ் வழிக் கல்வி விழிப்புணர்வை நம் தமிழ் நாடெங்கும் எடுத்துச் செல்வது, பள்ளிகளை மேம்படுத்துவது என்ற நிலையில் தமிழ் வழியில் நடந்த பள்ளிகள் அமைப்புகளாக ஒன்று சேர்ந்தன.
தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு
1997 இல் தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சென்னை அதன் சுற்றுபகுதியில் இயங்கிய தமிழ்வழிப் பள்ளிகள், பள்ளிகளைத் தொடங்க இருந்தவர்களும் சேர்ந்தே இது உருவானது. திருவாட்டி இறை பொற்கொடி அம்மையார் தலைவராகவும், திரு. வெற்றிச்செழியன் அவர்கள் செயலராகவும் திரு. கோலப்பன் அவர்கள் பொருளராகவும் பொறுப்பேற்க அது சென்னை சங்கங்களுக்கான பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
தாய்த்தமிழ் கல்விப் பணி
அதே காலக் கட்டத்தில் தமிழகமெங்கும் பல தமிழ்வழிப் பள்ளிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ‘தாய்த்தமிழ்ப் பள்ளி’ எனும் பெயரில் தொடங்கப்பட்ட பள்ளிகள் தாய்த்தமிழ்ப் பள்ளி எனும் பெயரில் முதற் பள்ளியைத் தொடங்கிய
திரு. தியாகு அவர்களின் ஒருங்கிணைப்பில் ‘தாய்த்தமிழ்க் கல்விப் பணி’ எனும் அமைப்பாக 1998இல் ஒன்றிணைந்தன.
புதிய அமைப்புகள்
காலச் சூழலில் குறள்நெறித் தாயத் தமிழ்ப் பள்ளிகள் எனும் அமைப்பு அதிலிருந்து கிளைத்தது.
தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் கூட்டமைப்பும் புதிதாக உருவானது.
தமிழ்வழிக் கல்விக் கழகம்
1998இல் தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பானது ஒரு மேலான ஒருங்கிணைப்பை நோக்கி தமிழ்வழிக் கல்விக் கழகம் எனும் அமைப்பாக மாறியது.
பள்ளிகள்
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் சற்றேறக்குறைய 100 தமிழ்வழிப் பள்ளிகள், தாய்த் தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. அவை இன்று மூன்றில் ஒன்றாகச் சுருங்கி விட்டன. இப்போது உள்ள பள்ளிகளை அமைப்பு வழிக் காண்போம்.
தமிழ்வழிக் கல்விக் கழகம்
இதன் தலைவர் திரு. சக்தி காமராசர் அவர்கள்
செயலாளர் திரு. வெற்றிச்செழியன் அவர்கள்
பொருளாளர் திருவாட்டி. சாமியாத்தாள் அவர்கள்
பள்ளிகள்
1. திருவள்ளுவர் மழலையர் தொடக்கப் பள்ளி – மேடவாக்கம்.
2. பாவேந்தர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்பள்ளி – குன்றத்தூர்.
3. சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம் – கரூர்
4. பாவாணர் தமிழ்வழிப் பள்ளி – பள்ளிக்கரணை
5. ஔவையார் தமிழ்வழி ம.தொ.பள்ளி – தேக்கம்பட்டி, சேலம்.
6. பாவலரேறு தமிழ்வழி தொடக்கப் பள்ளி – புதுப்பட்டினம்.
7. திருவள்ளுவர் தமிழ்வழி ம.தொ.ப. – கோனேரிப்பட்டி, சேலம்.
தாய்த்தமிழ்க் கல்விப் பணி
இதன் தலைவர் திரு. தங்கராசு அவர்கள்
செயலாளர் திரு. தமிழ்க்குரிசில் அவர்கள்
பொருளாளர் திரு. குமணன் அவர்கள்
பள்ளிகள்
1. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – கள்ளிப்பாளையம், பொள்ளாச்சி
2. தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப் பள்ளி – பல்லடம்
3. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – வள்ளலார் நகர் ( வெள்ளியங்காடு அருகில் ) திருப்பூர் -4.
4. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – பாண்டியன் நகர், திருப்பூர்
5. தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப் பள்ளி – மேட்டூர்.
6. தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி – கோபி
7. தாய்த்தமிழ் மழலையர் பள்ளி – கோபி
8. தாய்த்தமிழ் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி – கோபி
11. தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப் பள்ளி – கவுந்தம்பாடி
12. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – சங்கரன் கோயில்
13. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – திண்டிவனம்
தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் கூட்டமைப்பு
திரு பாப்பா நாடு காமராசு அவர்கள் ஒருங்கிணைப்பில் செயல்படுகின்றது.
பள்ளிகள்
1. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – வடகாடு
2. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – பட்டுக்கோட்டை
3. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – காமராசபுரம், புதுக்கோட்டை
4. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – பெருஞ்சுனை, புதுக்கோட்டை
5. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – புதுக்கோட்டை நகரம்
6. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – கந்தர்வக்கோட்டை
7. தாய்த்தமிழ் தொ.பள்ளி – வெள்ளாகுளம்
8. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – சுளேசுவரன்பட்டி,பொள்ளாச்சி
பிற பள்ளிகள்
எந்த அமைப்பிலும் சேராமல் செயல்பட்டு வரும் பிற பள்ளிகள்
1. குறள்நெறி தாய்த்தமிழ் நடுநிலைப்பள்ளி – அம்பத்தூர்
2. திருவள்ளுவர் உயர்நிலைப்பள்ளி – காரைக்கால்
3. திருவள்ளுவர் உயர்நிலைப்பள்ளி – சாத்தனூர்
4. தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளி – சிங்கனூர்.
5. தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – கலைவாணர் நகர், திருப்பூர்.
தமிழ் வழிப்பள்ளி அமைப்புகளின் கூட்டமைப்பு
தமிழ் வழியில் நடைபெறும் பள்ளி அமைப்புகள் ஒன்று சேர்ந்து செயல்படுவது பயன்கூடும். இந்த அடிப்படையில் அமைப்புகளைக் கடந்து தமிழ்வழிப் பள்ளிகள் தொடர்பும் உறவும் கொண்டிருந்தாலும் தமிழ்வழிக் கல்விக் கழகமும், தாய்த்தமிழ்க் கல்விப் பணியும் இணைந்து தமிழ்வழிப்பள்ளி அமைப்புகளின் கூட்டமைப்பு எனும் பெயரில் ஒன்று சேர்ந்துள்ளனர்.
தமிழ்வழிப்பள்ளிகளின் தனிப்பட்ட சிக்கல்களின் காரணமாக அவற்றின் இணைந்த செயல்பாடுகள் இன்றைய நாட்களில் குறைவாகவே உள்ளன.
இத்தமிழ்வழி, தாய்தமிழ் பள்ளிகள் அனைத்தும் பல்வகை சிக்கல்களுக்கு இடையேயே நடைபெற்று வருகின்றன. வாய்புடையவர்கள் இயன்ற வழிகளில் இப்பள்ளிகளுக்கு உதவுதல் பயன்தரும்.
இந்த தமிழ்வழிப்பள்ளிகளைப் பற்றி ஒவ்வொரு பள்ளியாக தொடர்ந்து காண்போம்…
இது தொடர்பான கூடுதல் செய்திகளையும் பள்ளிகள் பற்றிய செய்திகளையும் கட்டுரையாளர்க்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – வெள்ளியங்காடு, திருப்பூர். என்பதை
தாய்த்தமிழ் ம.தொ.பள்ளி – வள்ளலார் நகர் ( வெள்ளியங்காடு அருகில் ) திருப்பூர் -4 என திருத்திக் கொள்ளவும்.
நன்றி ஐயா. திருத்தப்பட்டது.