தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 21- 40
(தமிழ்ச்சொல்லாக்கம் 12- 20 தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
21. சமித்தருளல் — பொறுத்தல்
22. கசகும்பம் — யானை மத்தகம்
23. நிபுணை — மிக வல்லவள்
24. வாஞ்சை — பிரியம்
25. சம்பூரணமாகும் — நிறைவேறும்
26. சுதினம் — நல்லநாள்
27. விநயம் — மரியாதை
28. பிரதிகூலமாய்— மாறாக
29. சிரோண்மணிகாள்— தலைவர்கள்
30. சங்கோசம் — வெட்கம்
31. தரம் — பக்குவம்
32. சரற்காலம் — மாரிக்காலம்
33. அபேட்சை — ஆசை
34. சுதினம் — நல்லநாள்
35. வாசுதவம் — உண்மை
36. சங்கமம் — கூட்டம்
37. ஆருசிக்கின்றமை — இழுத்தப்படுகின்றமை
38. சகசம் — உண்மை
39. அபிலாசம் — விருப்பம் (பக்.10)
40. காடந்தகாரம் — கனவிருள்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply