தமிழ்பற்றிய ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக – பொள்ளாச்சி நசன்
தமிழ்பற்றிய ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக – பொள்ளாச்சி நசன்
தமிழையும், தமிழர்களையும், அடையாளம் காட்டுகிற, உயர்த்திப்பிடிக்கிற,வரலாறு காட்டுகிற, வழி அமைக்கிற — ஒற்றை வரிகளாக – எழுதி, உரியவரிடம் படம் வரைய வைத்து, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வரி என்று அச்சாக்கி, அதனை ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்து, நூலாக்கிப் பரவலாக்கினால், நம் தமிழ் மொழியை உலகோர் உணர்ந்து உயர்த்திப் பிடிப்பர். அதற்கான தளம் அமைப்போம்.
முதற்கட்டமாக அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒற்றை வரிகளை எழுதுவோம். தனி ஒரு மனிதரது வரியாக இல்லாமல் விருப்புடையவர் அனைவரையும் எழுதக் கேட்போம். மே இறுதிக்குள் அனைத்து வரிகளையும் தொகுத்துப் படங்களை உருவாக்கி அச்சாக்குவோம்
நான் எழுதியுள்ள தமிழ் உண்மை வரிகள் வருமாறு:
1) உலகில் மாந்தனும் மொழியும் தோன்றிய இடம் இலெமூரியா என்கிற குமரிக் கண்டமே.
2) முதலில் தோன்றிய மொழிகளில் இன்றுவரை வழக்கிலிருக்கும் மொழி தமிழ்மொழி.
3) தமிழர் நிலத்தின் நான்கு வகைகள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்றாகும்.
4) உலகில் யார் வாயைத் திறந்தாலும் ஒலிப்பது ‘அ’ ஒலிதான்.
5) உலகின் பாதிக்கு மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்,
6) 64 கலைகளை வரிசைப்படுத்தி அதில் புலமையும் கண்டது தமிழ் மொழி.
7) மீன் பிடித்த பரதவரே கடல் கடந்து வாணிகம் செய்தனர்.
8) உலகமாந்தனின் நலம் கருதித் தமிழில் எழுதப்பட்ட அரிய நூல் திருக்குறள்.
9) கடல் கொண்டும் அழியாத இலக்கண இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி.
10) குழலில் நான்கு துளையிட்டு ஆதி இசையை இசைத்தவர் தமிழ் ஆயர்குல மக்களே.
11) அனைத்து வகையான நோய்களுக்கும் எளிய மருத்துவமுறையைக் கண்டது தமிழ்ச் சித்தர்களே.
12) உணவையே மருந்தாக மாற்றிய வாழ்முறையைக் கண்டறிந்து வாழ்ந்தது தமிழ்ச் சித்தர்களே.
13) எளிய முறையில் அனைத்தையும் கணக்கிட்ட கணக்கதிகாரம் கண்டது தமிழர்களே.
தாங்களும் ஒற்றை வரிகளை எழுதி எனக்கு அனுப்பவும். நண்பர்களை எழுதக் கேட்கவும்
அன்புடன்
பொள்ளாச்சி நசன்
Leave a Reply