தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு
தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு
குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் மீண்டும் ஆடி 16, 2046 / ஆக.01, 2015 அன்று மீண்டும் பார்வையிடப்பட்டது.
புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், பாவலர் ம.கணபதி, அனகை நா.சிவன், நாஞ்சில் நடராசன், வளனரசன், தமிழ்த்தென்றல், திருவாட்டி அமுதநம்பி சோழன் நம்பியார், ஆகியோர் சிற்பி இரவியுடன் சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடினர். அவை வருமாறு: –
- தலைமுடி முன்புறமும் பின்புறமும் சரியாகத் தெரிய வேண்டும்.
- இடப்பக்கத்தில் உள்ளச் செவியோர முடி (கிருதா) கீறப்பட வேண்டும்.
- வலப்பக்கப்புருவம் முழுமையாய் (இறுதிவரை வர) வேண்டும்.
- வலப்புறப் புருவம் வளைந்தும் இடப்புறப் புருவம் நேராகனுவம் உள்ளன சம நிலையில் இருக்க வேண்டும்.
- இடக்கண்போல் வலக்கண் அமைய வேண்டும்.
- கரு விழிகளுக்குக் கீழே வெண்படலம் இல்லாமல் மேலே இருக்க வேண்டும்.
- வலப்புற மீசை உதட்டை மறைக்கும் நிலையில் உள்ளது. உதட்டின் மேல் அமைக்க வேண்டும்.
- கண்களுக்கும் மீசைக்கும் உள்ள இடைவேளி இருபுறமும் சமநிலையில் இருக்க வேண்டும்.
- தாடை(நாடி) நடுவில் சிறுகோடு அமைந்து இயற்கையாக அமைய வேண்டும்.
- வளையங்கள் மாட்டப்பட்டுள்ள காதுகளின் பொத்தல்கள் சம அளவில் இருக்க வேண்டும்.
- இடப்பக்கச் செவி வளையம்போல் வலப்பக்க வளையமும் அமையவேண்டும்.
- வலப்பக்கக் காதுவளையம் கழுத்தில் ஒட்டியவாறு உள்ளது. சற்று விலகி – வலப்பக்கமும் இடப்பக்கமும் சமநிலையில் தொங்கும் வகையில் – இருக்க வேண்டும்.
- கழுத்தில் மென்மையான மடிப்பு அமைய வேண்டும்.
- இடப்பக்கத் தோள் இறங்கி உள்ளது. இருபுறத்தோள்களும் சமநிலையில் இருக்க வேண்டும்.
- தலை இடப்பக்கம் சாய்ந்தாற்போல் உள்ளது. நேராக இருக்க வேண்டும்.
- மேலாடை உடலிலிருந்து வலப்பக்கம் தொங்கும் பகுதி இணைவாக அமைய வேண்டும்.
- வலக்கையில் வளைவு இருக்க வேண்டும்.
18.கால்கட்டை விரல்கள் ஒரே மாதிரி அமைய வேண்டும். வலப்பக்க ‘ப’ வடிம்போல் இடப்பக்கமும் அமைக்கலாம்.
- வேட்டி மடிப்புத் தெரியும் வகையில் இருக்க வேண்டும்.
- வலக்கண் பெரியதாகவும் இடக்கண் சிறியதாகவும் உள்ளது. ஒத்த நிலையில் இருக்க வேண்டும்.
- எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைக் கையில் வைத்திருப்பதுபோல், வலக்கையும் இடக்கையும் உடலிலிருந்து சற்று விலகியும் ஓலைச்சுவடி உள்ளங்கை சற்றுத் திரும்பியும் இருக்க வேண்டும்.
- வலக்கால் பாதம் இடக்கால் தொடையின் அடியில் மறையும் வகையில் இருத்தலே நன்று. குறைந்தது வலக்கால் பாதம் தூக்கிய நிலையில் உடலை ஒட்டி இல்லாமல் இடக்கால் முட்டியின்மேல் அமைய வேண்டும்.
சிலை உருவானபின்னர் நமக்குத் தெரிந்தகுறைகள் இடம் பெறக்கூடாது என்பதற்கான நிறைகாணும் குறிப்புகளே இவை.
இக்குறிப்புகளையும் படங்களையும் பார்த்து மேற்கொண்டு தெரிவிக்க வேண்டிய குறிப்புகள் இருப்பின் அன்பர்கள் தெரிவித்து உதவ வேண்டுகிறோம்.
ஒல்காப்புகழ் தொல்காப்பியர் சிலை உருவாக்கத்தில் ஒவ்வொருவர் பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சிக்குரியதல்லவா?
Leave a Reply