(தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு தொடர்ச்சி)

அன்பர் கதிரவன் தாழி மடல் 45இல் இரு செய்திகளை முன்வைத்து விளக்கம் கோரியிருந்தார்:

1.   வியத்துநாம் வரலாறு தொடர்பான ஒரு செய்தி;

2.   தேசங்களின் தன்-தீர்வுரிமை தொடர்பாக இலெனினிடமிருந்து ஒரு நீண்ட மேற்கோள்.

வியத்துநாமைப் பொறுத்த வரை இந்தோ- சீனா(INDO – CHINA) என்ற ஏட்டின் 1970 சூன் இதழின் படப் படி ஒன்றை அன்பர் கதிரவன் அனுப்பியுள்ளார். கருத்துக்குரிய வரலாற்றுச் செய்திகள் அதில் காணக் கிடைக்கின்றன. அவர் நேற்று அனுப்பியதோடு சேர்த்து இதையும் நாம் பிறகு எடுத்துக் கொள்வோம்.

இப்போது அந்த இலெனின் மேற்கோள்களைப் பார்ப்போம்:

___உருசியாவில் இதைப் போல ஏதாவது உண்டா? இன்னும் மோசமான தேசிய இன ஒடுக்கு முறை அபாயத்தை எதிரிட வேண்டுமே என்ற அச்சத்தால் வேற்று இனத்தவர்கள் மகா உருசியர்களுடன் ஒற்றுமை வேண்டுமென்று நமது நாட்டில் முயற்சி செய்கிறார்களா?

தேசிய இனங்களின் தன் தீர்வுரிமை பற்றிய சிக்கலில் உருசியாவையும் ஆத்திரியாவையும் ஒப்பிடுவது பொருளற்றது, வெற்றாரவாரமானது, அறிவில்லாதது என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்தக் கேள்வியை எழுப்பினால் போதும்.

 “தேசிய இனச்சிக்கல் தொடர்பாக உருசியாவில்  காணப்படும் தனிப்பட்ட நிலைமைகள் ஆத்திரியாவில் நாம் காணும் தனிப்பட்ட நிலைமைகளுக்கு நேர் எதிரானவை. மகாஉருசியா எனும் தனியொரு தேசிய இன மையத்தைக் கொண்டதான அரசாகும் . மகாஉருசிய இனத்தவர் பரந்ததான இடைமுறிவு இல்லாத நிலப்பரப்பில் வாழ்கின்றனர், அவர்களின் தொகை ஏறத்தாழ  7,00,00,000 ஆகும். இந்தத் தேசிய இன அரசின் தனிப்பட்ட சிறப்பியல்புகளாவன: முதலாவதாக, “வேற்று இனத்தவர்கள்” (இவர்கள் மொத்த மக்கள் தொகையில் பெரும்பான்மையினர்—57 %) எல்லைப்புறப் பகுதிகளில் வசிக்கிறார்கள்; இரண்டாவதாக, இந்த வேற்று இனத்தவர்கள் அண்டை நாடுகளைக் (ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல) காட்டிலும் இங்கு அதிகக் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்; மூன்றாவதாகப், பல இடங்களில் எல்லைப்புறப் பகுதிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சக இனத்தவர்கள் எல்லைகளுக்கு அப்பால் வாழ்கிறார்கள், அதிக தேசிய இன சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் (மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளில் உள்ள ஃபின் இனத்தவர், சுவீடிசு காரர்கள், போலந்துக் காரர்கள், உக்குரேனியர்கள்,     உருமேனியர்கள் ஆகியவர்களைக் குறிப்பிட்டாலே போதும்); நான்காவதாக உருசியரல்லாதார் வாழும் எல்லைப்புறப் பகுதிகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், கலாசாரத்தின் பொதுத் தரமும் மத்தியப் பகுதியைக் காட்டிலும் அடிக்கடி உயர்ந்தவை. இறுதியாக, அண்டையிலுள்ள ஆசிய நாடுகளில்தான் பூர்சுவா புரட்சிகள், தேசிய இன இயக்கங்களின் வளர்ச்சிப் படியின் துவக்கத்தைக் காண்கிறோம், அவை உருசியாவின் எல்லைகளுக்குள் வாழும் சில சக உறவுடைய தேசிய இனங்களிடையே பரவி வருகின்றன.

“இவ்வாறாக, உருசியாவின் தேசிய இனச்சிக்கலின் திட்டவட்டமான வரலாற்றுச் சிறப்பியல்புகள்தான் இன்றைய காலப் பகுதியில் தேய இனங்களின் தன்-தீர்வுரிமை அங்கீகரிக்கப்படுவதை நமது நாட்டில் தனி அவசர முக்கியத்துவமுடைய ஒரு காரியமாக ஆக்கியுள்ளன.

“தவிர, முற்றும் மெய்விவரங்களைக் கொண்ட கோணத்திலிருந்து பார்த்தால் கூட, ஆத்திரிய சமூக-சனநாயகவாதிகளின் வேலைத் திட்டத்தில் தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை பற்றிய அங்கீகாரம் எதுவும் காணப்படவில்லை என்னும் உரோசா (உ)லுக்குசம்பர்க்கின் கூற்று தவறானது.

“தேசிய இன வேலைத் திட்டத்தை ஒப்புக் கொண்ட புரூயூன் காங்கிரசு குறிப்பேடுகளைத் திறந்து பார்த்தால் போதும், உக்குரேனிய (உருதீனிய) சார்பாளர் குழு முழுவதன் சார்பில் உருதீனிய சமூக-சனநாயகவாதியான கன்கேவிச்சும் (குறிப்பேடுகள், பக்கம் 85) போலிசு சார்பாளர் குழு முழுவதன் சார்பில்…”___

[இந்த மேற்கோளைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை கருதி ஆங்கிலத்திலும் தருகிறேன்.]

Is there anything like this in Russia? Is there in our country a striving of the “subject peoples” for unity with the Great Russians in face of the danger of worse national oppression?

One need only pose this question in order to see that the comparison between Russia and Austria on the question of self-determination of nations is meaningless, platitudinous and ignorant.

The peculiar conditions in Russia with regard to the national question are just the reverse of those we see in Austria. Russia is a state with a single national centre— Great Russia. The Great Russians occupy a vast, unbroken stretch of territory, and number about 70,000,000. The specific features of this national state are: first, that “subject peoples” (which, on the whole, comprise the majority of the entire population—57 per cent) inhabit the border regions; secondly, the oppression of these subject peoples is much stronger here than in the neighbouring states (and not even in the European states alone); thirdly, in a number of cases the oppressed nationalities inhabiting the border regions have compatriots across the border, who enjoy greater national independence (suffice it to mention the Finns, the Swedes, the Poles, the Ukrainians and the Rumanians along the western and southern frontiers of the state); fourthly, the development of capitalism and the general level of culture are often higher in the non-Russian border regions than in the centre. Lastly, it is in the neighbouring Asian states that we see the beginning of a phase of bourgeois revolutions and national movements which are spreading to some of the kindred nationalities within the borders of Russia.

Thus, it is precisely the special concrete, historical features of the national question in Russia that make the recognition of the right of nations to self-determination in the present period a matter of special urgency in our country.

Incidentally, even from the purely factual angle, Rosa Luxemburg’s assertion that the Austrian Social-Democrats’ programme does not contain any recognition of the right of nations to self-determination is incorrect. We need only open the Minutes of the Brünn Congress, which adopted the national programme,[1] to find the statements by the Ruthenian Social-Democrat Hankiewicz on behalf of the entire Ukrainian (Ruthenian) delegation (p. 85 of the Minutes), and by the Polish Social-Democrat Reger on behalf of the entire Polish delegation (p. 108), to the effect that one of the aspirations of the Austrian Social-Democrats of both the above-mentioned nations is to secure national unity, and the freedom and independence of their nations. Hence, while the Austrian Social-Democrats did not include the right of nations to self-determination directly in their programme, they did nevertheless allow the demand for national independence to be advanced by sections of the party. In effect, this means, of course, the recognition of the right of nations to self-determination! Thus, Rosa Luxemburg’s reference to Austria speaks against Rosa Luxemburg in all respects.

தமிழில் இந்த மேற்கோள் அரைகுறையாக முடிவது போல் அல்லாமல் ஆங்கிலத்தில் முழுமைப்படுத்தியுள்ளேன். தோழர் கதிரவன் அனுப்பியுள்ள திரைப்பிடியில் “போலிசு சார்பாளர் குழுவின் சார்பில்…” என்று அரைகுறையாக நிற்கிறது. இதற்குப் பிறகு வரும்

….. by the Polish Social-Democrat Reger on behalf of the entire Polish delegation (p. 108), to the effect that one of the aspirations of the Austrian Social-Democrats of both the above-mentioned nations is to secure national unity, and the freedom and independence of their nations. Hence, while the Austrian Social-Democrats did not include the right of nations to self-determination directly in their programme, they did nevertheless allow the demand for national independence to be advanced by sections of the party. In effect, this means, of course, the recognition of the right of nations to self-determination! Thus, Rosa Luxemburg’s reference to Austria speaks against Rosa Luxemburg in all respects

என்ற இறுதிப் பகுதியின் முக்கியத்துவத்தை             

இந்த விவாதத்தின் இறுதியில் நான் சொல்கிறேன்.

சரி, இந்த மேற்கோள் இலெனின் எழுதிய “தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை [சுய-நிர்ணய உரிமை]” (RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION) என்ற நூலின் 3ஆம் அதிகாரத்திலிருந்து எடுத்தளிக்கப்படுகிறது. இந்த அதிகாரத்துக்கு இலெனின் கொடுத்த தலைப்பு: “உருசியாவில் தேசியஇனச் சிக்கலின் உருவியல் கூறுகளும் உருசியாவின் முதலியக் குடியாட்சியச் சீர்திருத்தமும்” [THE CONCRETE FEATURES OF THE NATIONAL QUESTION IN RUSSIA, AND RUSSIA’S BOURGEOIS-DEMOCRATIC REFORMATION]

[என் தமிழாக்கமும் அச்சில் வந்துள்ள மொழிபெயர்ப்பும் சற்றே வேறுபடலாம். என் கையில் தமிழ் மொழிபயர்ப்பு நூல் இல்லாமல் போய் விட்டது.]

இந்த நீண்ட மேற்கோளில் இலெனின் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த மேற்கோளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்துத் தலையைப் பிய்த்துக் கொள்ளாமல், மொத்த நூலின் கருத்தையும் உள்வாங்கிக் கொண்டு இந்த மேற்கோளின் இடம்பொருள்ஏவல் கருதிப் பொருள் கொள்ள வேண்டும். 

உரோசா (உ)லுக்குசம்பர்க்கு எழுதிய “தேசிய இனச் சிக்கலும் தன்னாட்சியும்” என்ற கட்டுரையை மறுத்து 1914 பிப்பிரவரி – மே காலத்தில் இலெனின் இந்த நூலை எழுதினார். நூலின் முதல் அதிகாரம்: தன்-தீர்வு (சுய நிர்ணயம்) என்றால் என்ன? 1903ஆம் ஆண்டின் உருசியக் கட்சித் திட்டத்துக்கு முன்பே 1896இல் இலண்டனில் நடந்த பன்னாட்டுப் பேராயம் தன்-தீர்வு பற்றிப் பேசியதை இலெனின் எடுத்துக் காட்டுகிறார்:

“இந்தப் பேராயம் அனைத்துத் தேசிய இனங்களின் முழு அளவிலான தன்-தீர்வுரிமையையும் ஆதரிப்பதாகப் பறைசாற்றிக் கொள்கிறது; படைவகை, தேசியவகை அல்லது பிறவகை முற்றாதிக்க நுகத்தடியின் கீழ் அல்லலுற்று வரும் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்கள் பாலும் பரிவு தெரிவித்துக் கொள்கிறது….” (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

அனைத்துத் தேசிய இனங்கiளின் தன்-தீர்வுரிமை என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மார்க்குசியத்தின் தேசியத் திட்டம் என்ன? என்ற வினாவிற்கு விடையிறுக்கும் போது இரத்தினச் சுருக்கமாக இலெனின்  முடிவுரைக்கிறார்:

“அனைத்துத் தேசிய இனங்களுக்கும் முழுமையான உரிமைச் சமத்துவம்; தேசிய இனங்களுக்குத் தன்-தீர்வுரிமை; அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒற்றுமை – மார்க் குசியமும் உலகமுழுவதன் பட்டறிவும், உருசியாவின் பட்டறிவும் தொழிலாளர்களுக்குக் கற்றுத்தந்துள்ள தேசியத் திட்டம் இதுவே.”

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

இலெனின் அனைத்துத் தேசிய இனங்களுக்குமான தன்-தீர்வை வலியுறுத்தவில்லை, அவர் கூறியது உருசியாவுக்கு மட்டும் பொருந்தும், இந்தியாவுக்குப் பொருந்தாது என்று நீண்ட காலமாகவே ஒரு திரிபு பேசப்படுகிறது. இதற்கு இலெனின் மேற்கோள்களைத் தந்திரமாக உருவி வந்து பயன்படுத்தும் போக்கு உள்ளது. சிபிஎம் தலைவர்கள் சிலர் இந்த வேலையில் சமர்த்தர்கள். கடைசியாக இந்தத் திரிபில் இணைந்திருப்பவர் தோழர் பெ. மணியரசன். அவருக்கு மறுப்பாக நான் எழுதிய “ஆய்வின் பெயரால் அவதூறு” நாளை தாழியில் இடம்பெறும்.

அன்பர் கதிரவனும் சரி, இந்த உரையாடலைத் தொடரும் மற்றவர்களும் சரி, சட்டு புட்டென்று முடிவு காண அவசரப்பட வேண்டா. பலருக்கு இந்த உரையாடல் சலிப்பூட்டவும் செய்யக் கூடும். ஆனால் பொறுமையாக அணுகிக் கூர்மையாகக் கவனித்து வந்தால் புரிந்து கொள்ள முடியும், என்னால் புரிய வைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். தொடர்வோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 46