நம் நாட்டில் நடைபெறும் ஆட்சியே சாதிமுறை ஆட்சியாகிவிட்டது! – சி.இலக்குவனார்
நம் நாட்டில் நடைபெறும் ஆட்சியே சாதிமுறை ஆட்சியாகிவிட்டது.
சாதிகள் ஒழிய வேண்டுமென்று மேடைகளில் உரக்க முழங்குகின்றனர். இதழ்களில் இனிமை பொருந்த எழுதுகின்றனர். ஆனால் செயலில் சாதிப்பதற்கு அடிமையாகின்றனர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமே இந்நாட்டாரின் பெருவழக்காய்ப் போய்விட்டது. கற்றபின் நிற்க அதற்குத்தக என்பதனை உளங்கொள்வார் அரியராகிவிட்டனர்.
தேர்தல் முறை வந்தபிறகு சாதிகளின் செல்வாக்கு இன்னும் மிகுந்துவிட்டது. ‘வன்னியர் வாக்கு அந்நியர்க்கில்லை’ என்பது உலகறிந்த தேர்தல் முழக்கமாகும். சாதிகள் ஒழிக்க முற்பட்டுள்ள கட்சிகளும் சாதிகளின் நிலையறிந்தே தேர்தலுக்கு ஆட்களை நிறுத்தும் கடப்பாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இன்று நம் நாட்டில் நடைபெறும் ஆட்சியே சாதிமுறை ஆட்சியாகிவிட்டது.
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
Leave a Reply