தலைப்பு-நூலில் வரக்கூடாக் குற்றங்கள், பவணந்தி முனிவர் :thalaippu_kutrangalpathu

நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து

குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,

கூறியது கூறல், மாறுகொளக் கூறல்,

வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல்,

வெற்று எனத் தொடுத்தல், மற்று ஒன்று விரித்தல்,

சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன்இன்மை,

எவை இவை ஈர் ஐங் குற்றம் நூற்கே

  குன்றக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களில் குறைவுபடச் சொல்லுதலும் , மிகைபடக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் அதிகப்படச் சொல்லுதலும் , கூறியது கூறல் – முன் சொன்ன பொருளையே பின்னும் சொல்லுதலும் , மாறுகொளக் கூறல் – முன் சொன்ன பொருளுக்குப் பின் சொல்லும் பொருள் விரோதப்படச் சொல்லுதலும் , வழூஉச் சொற் புணர்த்தல் – குற்றமுடைய சொற்களைச் சேர்த்தலும் ; மயங்க வைத்தல் – இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என மயங்கவைத்தலும் , வெற்றெனத் தொடுத்தல் – பொருள் வெளிப்படையாகத் தோன்றச் சொற்களைச் சேர்த்தலும் , மற்று ஒன்று விரித்தல் – சொல்லத் தொடங்கிய பொருளை விட்டு இடையிலே மற்றொரு பொருளை விரித்தலும் ; சென்று தேய்ந்து இறுதல் – செல்லச் செல்லச் சொல் நடை பொருள் நடை தேய்ந்து முடிதலும் , நின்று பயன் இன்மை – சொற்கள் இருந்தும் ஒரு பிரயோசனமும் இல்லாமல் போதலும் , என்ற இவை நூற்கு ஈரைங் குற்றம் – என்று சொல்லப்பட்ட இவை நூலுக்குப் பத்துக் குற்றமாம்.

 பவணந்தி முனிவர், நன்னூல் 12

காண்டிகையுரை

அட்டை-நன்னூல், காண்டிகையுரை: attai_nannuul_kaandikaiyrai_aarumuganaavalar