பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு – நா. கணேசன்
பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு
பகழிக்கூத்தர் அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்தவர். கவி காளமேகம்போலச் சைவம் பாடிய வைணவர். திருச்செந்தூர் முருகன் சோதிக்க திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என அழகான பனுவல் பாடிய பெரும்புலவர். சீவகசிந்தாமணிச் சுருக்கம் என்னும் நூலும் பாடியவர். அதனைச் சருக்கரை இராமசாமிப் புலவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்தார். (குறைப்படி). அதில் உள்ள தற்சிறப்புப்
பாயிரத்தால் பகழிக்கூத்தர் பெயர்க்காரணமும், அவரது ஊரும் விளங்குகிறது.
திண்டிம கவி என்று அருணகிரிநாதர் அழைக்கப்பட்டதும் பகழிக்கூத்தர் பாடலால் தெரிகிறது. இவற்றை மு. இராகவையங்கார் பல ஆண்டுகட்கு முன்னர் விரிவாக எழுதியுள்ளார். அவற்றைப் பார்ப்போம்.
பகழிக்கூத்தர் வரலாற்றைச் சிறந்த அம்மானைப் பாடலாய்த் தந்துள்ளார் கவிவேழம் இலந்தை:
அவர்பாட்டுக்கு…
உவகையுடன் சண்முகனார் உயர்சங்கம் அமர்ந்திருந்து
அவர்பாட்டைத்தாம் சொன்னார் அரங்கத்தில் அம்மானை!
அவர் பாட்டைச் சண்முகனார் தாம் சொன்னார் ஆமாகில்
அவர்பாட்டுக்கேன் நின்றார் பகழியின் முன் அம்மானை?
அவர்பாட்டுக் கங்குநின்றார் சண்முகனார் அம்மானை!
அவர் பகழிக்கூத்தர்முன் பாட்டு வேண்டி நின்றார். பகழி மறுத்துவிட்டார். பிறகு வயிற்றுவலிதந்து ஆட்கொண்டார். பகழிக்கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடினார்.
அவர்பாட்டுக்குத் தேமேன்னு நின்றுகொண்டிருந்தார் என்பது பொருள்.
இராமநாதபுரத்தின் அருகே உள்ள புகலூர் இப்போது போகலூர் எனப்படுகிறது. இங்கே தான் சேது அரசு உதயம் ஆகிறது. இவ்வூரின் ஐயனார் – பெரும் பகழிக்கூத்தர் ஆவார். அவரது அருளால் பிறந்தவர் ஆதலால் பெற்றோர் ஐயனாரின் பெயரைத் தம் மகனுக்குஇட்டு வழங்கினர். கி.பி. 1624- இல் சேதுபதி கட்டிய பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு இப்பொழுது கிடைத்துள்ளது. அதனை இணைத்துள்ள நூற்படியில் காணலாம்.
ஆதார நூல்: எசு.எம்.கமால், சேதுபதி மன்னர் செப்பேடுகள்.
<https://lh3.googleusercontent.com/-nDMlkFH0uS8/V69L1KaUJrI/AAAAAAAAF_g/rudtqqLAMDMn-BNAfUvisvyq2QjN855YgCLcB/s1600/pukalur-pakazikuuttar-ayyanar-1.jpg>
<https://lh3.googleusercontent.com/-e_2MHZFDgbg/V69MS4W9zfI/AAAAAAAAF_k/nub3uPOee0AB-gv-IFR4NwiDAFgMc7-mgCLcB/s1600/pukalur-pakazikuuttar-ayyanar-2.jpg>
கூடுதல் செய்திகள் : பகழிக்கூத்தர், தினமலர்
http://temple.dinamalar.com/news_detail.php?id=17948
நா. கணேசன்
Leave a Reply