பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019
வைகாசி 12-14, 2050 / 26.05.2019-28.05.2019
பி,எசு.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி
திண்டுக்கல்
வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல்
மகா கணேச தமிழ் வித்தியா சாலைப் பள்ளி, மலேசியா
உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா
இணையத் தோழி, இந்தியா
பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019
அறிவிப்பு மடல்
கருப்பொருள்
தமிழ்மொழியின் பன்முகத்தன்மை
துணைக் கருப்பொருள்
தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம், வரலாறு, கலை/நுண்கலை, கல்வி/ கற்றல் கற்பித்தல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, வரலாறு, அறிவியல், ஒப்பியல், தமிழ்க்கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தமிழ்மொழியோடு தொடர்புடைய பிற துறைகள் சார்ந்த கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
கட்டுரை விவரம்
“தமிழ்மொழியின் பன்முகத்தன்மை” எனும் தலைப்பின் கீழ் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு அது தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் கட்டுரைகள் ஏற்கப்படும்.
கட்டுரைகள் துறைசார்ந்த வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டுத் தகுதியுள்ளவை ஏற்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய தகவல் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்
2019, ஏப்பிரல் 15ஆம் நாளுக்குள், ஆறு பக்கங்களுக்கு மிகாமல் முழுக் கட்டுரையையும் அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள் தமிழில் மட்டும் ஒருங்குகுறி (Arial Unicode MS, Latha, Vijaya) எழுத்துருக்களில் இருத்தல் வேண்டும்.
கட்டுரையாளர் பெயர், பணி விவரங்கள், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக சேர்த்து அனுப்ப வேண்டும்.
கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
[ ISSN – உடன் ஆய்வுக் கோவை வெளியிடப்படும்; வரைவோலை:
Treasurer, Valar Tamil Aayvu Manram (Dindigul) ]
கட்டணம்
இந்தியா – உரூபாய் 800
வெளிநாடு – 42 அமெரிக்க வெள்ளி(USD)
ஒருங்கிணைப்பாளர்கள்
இந்தியா
முனைவர் சி.மை. சரோ சினிபாய் – 94439 19198
முனைவர் ப.பத்மநாப(பிள்ளை) – 98943 60944
முனைவர் வ.இராசரத்தினம் – 94427 51031
வெளிநாடு
முனைவர் கா. இலட்சுமி – +91 90941 07500
திருமிகு தனேசு பாலகிருட்டிணன் +60143279982
Leave a Reply