பாடம் சொல்லும் முறை – நன்னூல்
பாடம் சொல்லும் முறை
ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடமும் வாலிதின் நோக்கி
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்
கொளக்
கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப
நன்னூல்
பாடம் சொல்லும்பொழுது உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயதாகத் தெரிவுசெய்து சிறந்த இடத்திலமர்க; தான் வழிபடும் கடவுளை வணங்கிப், பாடம் சொல்ல வேண்டிய பொருளை உள்ளத்தில் இருத்துக; விரைந்து சொல்லாமலும் சினந்து சொல்லாமலும் விருப்பமுடன் முகமலர்ச்சியாகக் கேட்கப்படுபவன் அறிவின் திறம் அறிந்து அவன் மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறுபாடு இல்லாத மனத்துடன் நூலறிவை வழங்குக.
Leave a Reply