57aadu_valarppu

தேனிமாவட்டத்தில் புத்துயிர் பெற்றது

ஆடு வளர்ப்புத்தொழில்

தேனிமாவட்டத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது ஆடு வளர்க்கும் தொழில்.

நமது நாட்டில் கால்நடைக்கணக்கெடுப்பு இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடைப் பேணுகை, பால்வளம், மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. இக்கணக்கெடுப்பு 19191 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 19ஆவது அகில இந்தியக் கால்நடைக் கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்டுக் கால்நடைப் பேணுகைத்துறை புள்ளியல் பிரிவு வாயிலாக வெளியிடப்படுகிறது.

இக்கணக்கெடுப்பு கால்நடைகளின் இனவளர்ச்சிக் கொள்கைகளை வழிவகுப்பதற்குப் பயன்படுகிறது. கால்நடைகளின் நலவாழ்வு மற்றும் மேம்பாட்டிற்குப் புதிய ஆராய்ச்சிகள் செய்வதற்கும், கால்நடைக்கான பாதுகாப்புத் திட்டங்களை வகுக்கவும் பயன்படுகின்றது.

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டின் படி 6,506 மற்றும் 13.517 கோடியாகும். இது முந்தைய 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பை விட முறையெ 9.07 மற்றும் 3.82 அதாவது 14.05 கோடி விழுக்காடு குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, கெ.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தருமலிங்காபுரம் பகுதிகளில் ஆடுகள் வளர்க்கும் தொழில் நன்றாக இருந்தது.

கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையாலும்,வேளாண் நிலங்கள் வறண்டு காணப்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்ததாலும், மேய்ச்சல் நிலங்கள் சுருங்கி வேளாண் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியதாலும் ஆடுகள் வளர்க்கும் தொழில் படிப்படியாக குறைந்தது. இதனால் பலஉழவர்கள் ஆடுகளை விற்றுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.

இப்பொழுது மழை பொழிந்து வேளாண் நிலங்கள் பசுமையாகக் காணப்படுவதால் ஆடுவளர்க்கும் தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.

57vaigai aneesu_name