தலைப்பு-உறவைத்தேடும் குடுமு்பத்தினர் : thalaippu_uravuthedum_sangamam

மீள்எழுச்சி பெற்றது காணாமல் ஆக்கப்பட்ட

உறவுகளைத் தேடிக் கண்டறியும்

வவுனியா மாவட்டக் குடும்பங்களின் சங்கம்

  இலங்கை சிங்களப் படையிடம் / அரசிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கத்துக்கு (FSHKFDR – Vavuniya District) புதிய மேலாண்மைக் குழுத் தேர்தல்கள் நடைபெற்று மீளக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

  வவுனியா நகர அவை உள்ளக மண்டபத்தில் பங்குனி 27, 2047 / 06.04.2016 அன்று காலை 11:00 மணிக்கு இதற்கான மீள்தகவமைவுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

  வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் தலைவரும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்ட பின்னும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கங்களின் (FSHKFDR – Tamil Homeland) தலைமை ஒருங்கிணைப்பாளருமான கோ.இராசகுமார் (இராசா) தலைமையில் நடைபெற்ற இந்த மீள்தகவமைவுக் கலந்துரையாடலில்,

வவுனியா மாவட்டத்தில் ‘ஆட்கடத்தல் – தடுத்து வைத்தல்’ நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், அவர்தம் உறவினர்கள், வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் துணைத் தலைவர் நா.நடராசா, துணைச் செயலாளர் கு.இராசேந்திரகுமார், ஊடகப் பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, குழுவின் இணைப்பாளர் எசு.உரோகான் இராசகுமார், நகரப்பகுதி இணைப்பாளர் க.கோணேசுவரன் முதலான தலைமைக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தின், (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District)…

தலைவர் ஊடகப் பேச்சாளராகத் திருமதி.கா.செயவனிதா,

துணைத் தலைவராகத் திரு.வே.புண்ணியம்,

செயலாளராகத் திருமதி.து.கலாவதி,

துணைச் செயலாளராகத் திருமதி.ம.வானதி,

பொருளாளராகத் திரு.க.பழனிநாதன்,

தலைமை ஒருங்கிணைப்பாளராகத் திருமதி.பே.பாலேசுவரி,

உதவி ஒருங்கிணைப்பாளராகச் செல்வி.தி.சாருசா,

நெடுங்கெணிப் பகுதி இணைப்பாளராகத் திருமதி.உயோ.சகுந்தலா,

செட்டிகுளம் பகுதி இணைப்பாளராகத் திருமதி.இ.தவமணி,

கோவில்புளியங்குளம் – ஆச்சிபுரம் பகுதிகளின் இணைப்பாளராகத் திருமதி.க.சுமதி,

புளியங்குளம் – கனகராயன்குளம் பகுதிகளின் இணைப்பாளராகத் திருமதி.நா.நாகம்மா,

பாலமோட்டை ஓமந்தை பகுதிகளின் இணைப்பாளராகத் திரு.சற்குணம்,

நெளுக்குளம் – கூமாங்குளம் பகுதிகளின் இணைப்பாளராகத் திருமதி.வே.சிவராணி,

சிதம்பரபுரம் பகுதி இணைப்பாளராகத் திருமதி.உ.சரசுவதி,

மறவன்குளம் பகுதி இணைப்பாளராகத் திருமதி.கை.பூவதி

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீள்தகவமைவுக் கலந்துரையாடலுக்கான மண்டப வாடகையையும் மதிய உணவுக்கான நிதியுதவியையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]