தலைப்பு-முள்ளிவாய்க்கால், சோமஇளங்கோவன் :thalaippu_mullivaaykkal_somailangovan

முள்ளி வாய்க்காலும் நமது முன்னேற்றமும்!

 

அருமைத் தமிழ் நெஞ்சங்களே !

 

ஆறாத வடு ! மாறாத அவமானம் ! சொல்லொன்னாத் துயரம் ! அதன் பெயர் முள்ளிவாய்க்கால்.

இன்று தமிழர்கள் வெறி பிடித்தத் தீவிரவாதிகள் அல்லர்; இனப் போராட்டதின் அடையாளங்கள் என்பதை உலகைப் புரிந்து கொள்ள வைத்துள்ளோம். அடைந்த  இன்னல்களைக் கேலம் மெக்ரேவின் உதவியுடன் உலகுக்குக் காட்டியுள்ளோம்.

இன்றைய தேவை, இனி என்ன செய்யப் போகின்றோம் என்பது தான்!

துன்பத்தில் வாழும் உடன் பிறப்புகளைத் தத்தெடுத்துக் கொள்வோம். ஈழத்தில் தமிழர் முன்னேற வகை செய்வோம்.

அந்தந்த நாடுகளில் நமது நிலைப்பாட்டைச், சிங்கள இனவாதத்தை எடுத்துரைப்போம். அனைவரும் சேர்ந்து உலக அளவில் தமிழர் விடுதலையின் முதன்மையை எடுத்துக் காட்டுவோம்.

குறைகளைக் களைவோம்.நிறைகளைப் போற்றுவோம்.

பாதைகள் வேறாக பல அமைப்புக்களாக இருக்கலாம், குறிக்கோள் ஒன்றாக இருக்கட்டும்.

தமிழரின் தாகம் தனி ஈழத் தாயகம்.

http://goo.gl/KfgcHe

   http://livestream.com/accounts/19413033/events/5387599

 

சோம இளங்கோவன்