மேலைத்திறனாய்வு முறைகளுக்கு எடுத்துகாட்டாகும் தமிழ் இலக்கியங்கள் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 59 / 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
60 / 69
மேலைத் திறனாய்வு அணுகுமுறைகள் : தமிழ்ச்சான்றுகள்
(சாரதா பதிப்பகம், சென்னை, 2019)
இந்நூல் இரு பகுதிகளாக உள்ளது. முதற் பகுதியில் பின் வரும் தலைப்புகளில் உள்ள பத்தொன்பது கட்டுரைகள் மேலைத்திறனாய்வு அணுகுமுறைகளை விளக்குகின்றன.
1.இலக்கிய ஆய்வு நெறிகள் 2.) மேலைத் திறனாய்வுக் கோட்பாடுகளும் தமிழறிஞரின் ஆய்வுகளும் 3.)புதுமைத் திறனாய்வு 4.) சிகாகோ திறனாய்வாளர்கள் 5.) மார்க்குசியத் திறனாய்வு 6.) தொன்மமும் தொன்மத் திறனாய்வும் 7.) சிதைவாக்கம் அல்லது கட்டவிழ்ப்பு 8.) இலக்கியமும் உளவியலும் 9.) பெண்ணியத் திறனாய்வு 10.) பெண்ணியமும் உளப்பகுப்பாய்வும் 11.) பக்குதினின் உரையாடலியலும் இடைப் பனுவலியலும் 12.) புதிய வரலாற்றியம் 13.) ஒப்பிலக்கிய அணுகுமுறை : ஏற்பும் தாக்கமும் 14.) வாசிப்போன் அனுபவத் திறனாய்வு 15.) நடையியல் 16.) இடைப்பனுவல் தன்மை 17.) பண்பாட்டு மானிடவியல் கோட்பாடுகள் 18.) சுற்றுச்சூழலியல் திறனாய்வு 19.) எடுத்துரைப்பியல் (Narratology)
: இரண்டாம் பகுதியிலுள்ள பதினேழு கட்டுரைகள் இவ்வணுகுமுறைகளுக்குக் கீழ்வரும் தமிழ்ச்சான்றுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன:-
1.) புறநானூறு 2.) குறுங்குடி மருதனார் பாடல் 3.) முல்லைப்பாட்டு 4.) பாரதிதாசனின் பாடல்கள் 5.) குறுந்தொகை 6.) கம்பராமாயணம் 7.) தொடித்தலை விழுத்தண்டினார் பாடல் 8.) கபிலரின் புறநானூற்றுப் பாடல்கள் 9.) பெருஞ்சித்திரனார் பாடல் 10.) இலெனின் தங்கப்பாவின் படைப்பிலக்கியங்கள் 11.) வள்ளலாரின் திருவருட்பா 12.)மலைபடுகடாம் 13.) பூமணியின் வெக்கை
ஓமரிலிருந்து அரவிந்தர் வரை – பல்வகைச் செவ்விலக்கிய ஆய்வுகள் (From Homer To Sri Aurabindo : Studies in Diverse Classics(2009)
இந்நூலில் 15 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. ஓமர், பிளேட்டோ, அரிட்டாடில், திருவள்ளுவர், வால்மீகி, காளிதாசன், உலுக்கிரிடியசு(Lucretius), திருமூலர், மாணிக்கவாசகர், சங்கரர், சேகுசுபிரியர், மிலுட்டன், பசவண்ணா, ஆனந்தரங்கம்(பிள்ளை), இரவீந்திரநாத்து தாகூர், இயேம்சு இயோய்சி(James Joyce), பாரதி, வல்லசு தீவென்சு(Wallace Stevens), இருவிங்கு இலேயிடன்(Irving Layton), சால் பெல்லோ(Saul Bellow), இலெசுலி பிடுலெர் (Leslie Fiedler), நார்த்துரோப்பு பிரை(Northrop Frye), அரவிந்தர், ஏ.கே.இராமானுசன் ஆகியோர் கவிதைகளின் மூலமாக மாறுபட்ட செவ்வியல் ஆய்வுகள் வழித் தமிழ் இலக்கியச் செழுமையை உணர்த்தியுள்ளார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 61/69 )
Leave a Reply