வண்ணப்பாடல் வகையிலான

திருப்புகழ் போல் இசைநூல்

வேறு மொழிகளில் இல்லை!

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்றதொரு இசைநூல் உலகில் வேறு மொழிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. சமற்கிருதம், தெலுங்கு, மலையாள மொழிகளில் இத்தகையநூல் இல்லை. அவ்வளவு அருமையான இந்நூலின் பெருமையை அதைப் பெற்ற தமிழர்களே அறிந்து கொள்ளவில்லை என்பது வருந்தக்கச் செய்தி. அருணகிரிநாதரே தம் திருப்புகழை, “நான் உனை நிகர் சந்தத்தமிழ் சொரிந்து பாடவும்” என்று சந்தத்தமிழ் என்று குறிப்பிடுகின்றார். என்றாலும் சந்தப் பாடல்களுக்கும் திருப்புகழ்ப் பாடல்களுக்கும் இடையே உள்ள நுட்பமான அமைப்பு வேறுபாடு நோக்கித் திருப்புகழ்ப் பாடல்களை “வண்ணப்பாடல்” என்ற வகையில் அடக்குவர் பின்வந்தோர்.

  அருணகிரிநாதரைப் பின்பற்றி ஏராளமான வண்ணப்பாடல்களை அருளிய தண்டபாணி சுவாமிகளும் இத்தகைய பாடல்களின் “இலக்கணத்தை ” “வண்ணத்தியல்பு” என்ற பெயரில்தான் வகுத்திருக்கிறார்.

முனைவர் இரா.திருமுருகன்:

ஏழிசை எண்ணங்கள்:

பக்கம்.91