வாழ்ந்திடுமோ தமிழ்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாழ்ந்திடுமோ தமிழ்தான்!
நற்றமிழில் பேசுவது மில்லை
அருந்தமிழில் எழுதுவது மில்லை
பைந்தமிழில் பாடுவது மில்லை
செந்தமிழில் பெயரிடுவது மில்லை
கன்னித்தமிழில் கற்பது மில்லை
இன்றமிழில் பூசிப்பது மில்லை
மூவாத்தமிழில் முழங்குவதுமில்லை
தமிழ்நெறியைப் போற்றுவது மில்லை
தமிழனென்று எண்ணுவது மில்லை
தமிழ் வாழ்க வெல்க என்றால்
வளர்ந்திடுமோ வாழ்ந்திடுமோ தமிழ்தான்!
Leave a Reply