(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200

(குறள்நெறி) 

  1. பிறர் குறையை நீ கூறி,  உன் குறையை உலகம் கூறச் செய்யாதே!
  2. இனியகூறி வளரும் நட்பை உணராது குறைகூறிப் பிரிக்காதே!
  3. நெருங்கியோர் குற்றத்தையும் கூறுபவரிடமிருந்து விலகு!
  4. அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே!
  5. அறனல்ல செய்தாலும் புறங்கூறாதே!
  6. புறங்கூறி வாழாதே!  
  7. பிறர் குற்றம்போல் உன் குற்றம் காண்!
  8. எல்லாராலும் இகழப்படப் பயனில சொல்!
  9. தீய செய்தலினும்  தீதான  பயனில சொல்லாதே!
  10. நீதிக்கு மாறாகப் பயனற்றவை சொல்லாதே!

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210]