வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240
(குறள்நெறி)
- (பசி தாங்கும் துறவியைவிட) வலிமையாகத் திகழப் பசியைப் போக்கு!
- பொருளைச் சேமிக்க, இல்லாதவர் பசி தீர்!
- பசிப்பிணி அண்டாதிருக்கப் பகுத்துண்!
- கொடை இன்பத்தை உணராமல் பொருளைச் சேர்த்து இழக்காதே!
- இரத்தலைவிட இழிவாகத் தனித்து உண்ணாதே!
- கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே என உணர்!
- கொடுத்துப் புகழ் பெறுவதே உயிர்க்கு ஆக்கம் என அறி!
- (அனைவராலும் பேசப்படக்) கொடுத்துப் புகழ் பெறு!
- உலகில் அழியாத புகழை அடையச் செயல்படு!
- புகழால் வரும் கேட்டையும் இறப்பையும் பொருட்படுத்தாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250]
Leave a Reply