விசயகாந்து எடுத்த முயற்சி  பாராட்டிற்குரியதே!

ஆனால், அரசியல் கணிப்பின்றிக் காங்கிரசிற்கு ஆதரவாகத்தில்லியில் அவர் பேசியதுதான் தவறு.

காங்கிரசிற்கு எதிரான அலை வீசும் தில்லியில்

காங்கிரசு ஒன்றும் திருத்த முடியாத கட்சி அல்ல என்று சொல்லும் துணிவு எப்படி வந்தது?

காங்கிரசைப் பற்றிய தவறான கணிப்பா?

தன்னைப்பற்றிய உயர்வான மதிப்பா?

காங்கிரசுடன் சேரத்துடிக்கும் ஒருவருக்குக் காங்கிரசை வீழ்த்த நினைப்போர் எங்ஙனம் வாக்களிப்பர்?

காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடுடன் பரப்புரை மேற்கொண்டிருந்தால்

அவர் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மிகுதியாய் இருந்திருக்கும்.

இனியாவது அவர் திருந்தட்டும்!

தமிழ், தமிழர் நலன் மீது உண்மையிலேயே ஈடுபாடு இருப்பின்,

தமிழினப்படுகொலைக்குக் காரணமான –

ஊழலின் உறைவிடமான –

தேசிய இனங்களை ஒடுக்கும் வன்முறை ஊற்றாக உள்ள –

காங்கிரசுக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து 1967 இல் விரட்டப்பட்ட காங்கிரசு என்றென்றும் இந்தியா எங்கும் தலைதூக்காமல் இருக்க, இருந்த இடம் தெரியாமல் மறைய தன் செயற்பாட்டை அமைத்துக்  கொள்ளட்டும்!

VIJAYKANTH 2

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்