drawing01

  “ஒவ்வு’ என்றால் ஒன்றைப் பற்று அல்லது ஒன்றைப் போல இருப்பது என்பது பொருள். இதிலிருந்து “ஒப்பு, ஓவம், ஓவியம்’ எனச் சொற்கள் பிறந்து உள்ளன. கண்ணால் கண்ட பொருளை மனதில் நிறுத்திப் பின்னர் இத்ன உருவத்தைச் சுவரிலோ அல்லது பிற பொருள்களின் மீதோ தீட்டி மூலப்பொருட்களின் தன்மையை அதில் எதிரொளிக்கச் செய்வதே ஓவியமாகும்.

  பழந்தமிழகத்தில் வண்ணம் தீட்டும் கோல்கள் “தூரிகை, துகிலிகை’ என இருவகைகளில் இருந்தன. வண்ணம் குழைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டும் பலகை வட்டிகை, மணிப்பலகை எனப்பட்டன. தூரிகை பாதிரிப்பூவைப் போல் இருந்தன என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ கூறுகின்றார்.

  சங்கக் காலத்தில் வித்தகன், கண்ணுள் வினைஞன், கைவினைஞன், ஓவியப் புலவன், ஓவியவல்லோன் முதலிய பெயர்களால் ஓவியர்கள் குறிக்கப்பட்டனர். பல்வகை ஓவியர்களும் இணைந்த கலைக்குழு “ஓவமாக்கள் குழு’ என அழைக்கப்பட்டது. பெண் ஓவியர்களும் அக்காலத்தில் இருந்துள்ளனர்.

  கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளையுடைய மாடிபோல் அகன்ற மாடக்கோயில்கள் இருந்திருக்கின்றன. இப்பொழுது நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் சோழன் செங்கணான் கட்டிய மாடக்கோவில் இருந்ததாகத் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

“செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூரில் மணிமாடம் சேர்மின்களே”

தரவு : தமிழ்ச்சிமிழ்