ஆளுமையர் உரை 83 & 84 : என்னூலரங்கம்: கலைகள்- இணைய அரங்கம்

தமிழே விழி!                                                               தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம் மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் முனைவர் இரா.மதிவாணன் உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன் தொடர்ந்து முற்பகல் 11.00   …

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!      தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…

பாடல் வகைகள்

பாடல் வகைகள்   குழந்தைப் பாடல்கள்: தாலாட்டுப்பாடல்கள்: விளையாட்டுப் பாடல்கள்: வேடிக்கைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் தெம்மாங்குப் பாடல்கள் மணப்பாடல்கள்: வாழ்த்துப் பாடல்கள் வசைப் பாடல்கள் பிணப்பாடல்கள்: ஒப்பாரிப் பாடல்கள் மாரடிப் பாடல்கள் களியல் பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் கோலாட்டுப் பாடல்கள் குறிகாரன் பாடல்கள் குடுகுடுப்பைப் பாடல்கள் கோடங்கிக் காரன் பாடல்கள் திருவிளக்குப் பாடல்கள் துளசிவழிபாட்டுப் பாடல்கள் வருணன்வழிபாட்டுப் பாடல்கள் மாரியம்மன் வழிபாட்டுப் பாடல்கள் வள்ளி வழிபாட்டுப் பாடல்கள் பிள்ளையார் வழிபாட்டுப் பாடல் அம்பாள் பாடல் வண்டியோட்டிப் பாடல் களையெடுப்போர் பாடல் கதிர்அறுப்போர் பாடல் சூடடிப்போர்…

கூத்து வகைகள்

கூத்து வகைகள்   1. குரவை 2. துணங்கை 3. வெறியாட்டு 4. கொடுகொட்டி 5. பாண்டரங்கம் 6. கபாலம் 7. வள்ளிக்கூத்து 8. வாளமாலை 9. துடிக்கூத்து 10. கழல்நிலைக் கூத்து 11. உரற் கூத்து 12. மற்கூத்து 13. குடக்கூத்து 14. மரக்கால்கூத்து 15. தோற்பாவைக் கூத்து 16. ஆரியக் கூத்து (கயிறாட்டம்) 17. தேசிக் கூத்து 18. வடுகுக் கூத்து 19. சிங்களக் கூத்து 20. சொக்கக் கூத்து 21. அவிநயக் கூத்து 22. கரணக் கூத்து 23. வரிக்…

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள்

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள் கூடல் (மதுரை) பொய்யா விழாவின் கூடற் பறந்தலை – அகநானூறு: 16:14 கொடிநுடங்கு மறுகிற் கூடற்குடா அது அகநானூறு:149: 14 யாம்வேண்டும் வையைப்புனல் எதிர்கொள்கூடல் பரிபாடல் : 10:40 4.மதிமலை மாலிருள் கால்சீப்பக் கூடல் பரிபாடல் : 10: 112 வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல் பரிபாடல் : 10:12 கூடலொடு பரங்குன்றினிடை பரிபாடல் : 17: 23 கொய்யுளை மான்தேர்க் கொடித்தேரான் கூடற்கும் பரிபாடல் : 17:45 புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்…

இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

 11 : தமிழே இன்பம்! – முடியரசன்   தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?   பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.   “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…

பாரத மொழிகளின் தாயே தமிழ்தான்! – பேரா.சி.இலக்குவனார்

   நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும்.   பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம்….

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

      ‘கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு’ என்று பாரதி வந்துதான்  கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே…

இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்

 10 தமிழன்னையை வாழ்த்துவோம்! நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே! தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில்   வரும் தமிழ் வாழ்த்துப் பாடல்.    “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த…

குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு

பழந்தமிழ் நாட்டில் குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு   நாடு தழுவிய ஒரே பண்பாடு. ஓரினப் பான்மை உருவாவதற்குக் காரணமாக இருந்தவற்றில் முதலானது பரந்து விரிந்துபட்ட கல்வியாகும். தமிழ்நாட்டில் நிலையான வருண வேறுபாடு அதன் காரணமாக ஏற்படும் உயர்வு தாழ்வு ஆகியன சங்கக் காலத்தில் வலுவாக இருந்ததில்லை. ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றில் எந்தக் காலத்திலுமே இருந்ததில்லை. காரணம், அப்பண்பு தமிழ்நாட்டுக்குரிய பண்பே அன்று. எக்குலத்தவராயினும் ஒருவர் கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அவருக்குச் சமுதாயத்தில் மிகுந்த மதிப்பு இருந்தது. எந்த மன்னனின் அவைக்கு வேண்டுமாயினும் சென்று…

சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை

சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை     செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்

பறை எனும் தகவல் ஊடகம்

  எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது.   சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை.   அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு,…