அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்!

 

பல்சான் றீரே!  பல்சான் றீரே!

அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்!

பொறியியல் தமிழில் புதுக்கிடப் புகுவீர்!

மருத்துவம் தமிழில் மலரச் செய்வீர்!

அருங்கலை பலவும் தமிழில் கொள்வீர்!

மாத்தமி ழெங்கும் மணந்திடச் செய்வீர்!

மலர்தலை யுலகின் மாந்தர் பலரும்

மாத்தமி ழேதன் தாய்மொழி யென்று

ஏத்திப் புகழுநாள் எய்திட வார்pர்!

காத்திருப் போமெனில் காலம் இல்லை

கண்ணிமைப் போழ்தும் கடவா துடனே

வண்மை வன்மை வாய்க்கப் பெற்ற

வல்லுநர் திரளே விரைகு வீரே!

முனைவர் மு.பொன்னவைக்கோ

  • கிண்டி பொறியியல் கல்லூரித் தமிழ் மன்றம், 1969 
  •