தலைப்பு- இக்கரைக்கு அக்கரை பச்சை, சச்சிதானந்தம் ‌தெய்வசிகாமணி :thalaippu_ikkaraikkuakkarai_sachithanantham

இக்கரைக்கு அக்கரை பச்சை!

இக்கரைக்கு அக்கறை பச்சையென்று எண்ணியே,

இக்கறை படிந்து நிற்கும் கட்சிகளை நம்பியே,

திக்கினை இழந்து தமிழர் நட்டாற்றில் தவிக்கிறோம்!

சக்கரைக்குள் நஞ்சினை மறைத்து வைத்து ஊட்டியே,

சிக்கலின்றித் தமிழனின் சிரம் அறுக்கும் துணிவுடன்,

மெத்தனத் தனத்துடன் வலம்வரும் பகைவரை,

உக்கிரக் கொளுந்துவிட் டுதித்திடுஞ் செந்தீயிலே,

இட்டழிக்குஞ் சக்திவாய்ந்த தமிழனுக்குத் தேர்தலில்,

மொத்தமாக வாக்களித்துத் தலைவனாக ஆக்குவோம்!

சச்சிதானந்தம் தெய்வசிகாமணி