இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்
- ஆற்காடு க. குமரன்
இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்!
இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்
விடியலில் விடுதலை பெற்றது என் உலகம்
அடக்குமுறையும் ஆணாதிக்கமும் ஒவ்வொரு நாளும்….
அத்தனையும் அரை மணி நேரம்….அ…..இம்சை தான்
ஒவ்வொரு நாளும் அயல்நாட்டு முதலீடுகள் பொருளாதாரம்
உடலையும் உயிரையும் தவிர வேறில்லை உடலே மூலதனம்
உழைக்க வழி இல்லை ஓரிடத்திலும் உண்மை இல்லை
பெண்மை நான் மட்டுமே உண்மை
சூடு சொரணை இல்லை கூச்சம் வெட்கம் மானம் இல்லை
ஆள்பவனுக்கே இல்லை
அடிமைக்கு எதற்கு…..?
ஆண்மைகள் எனக்குள்ளே அடங்கிப் போகின்றன
உண்மைகள் எனக்குள்ளே உறங்கி போகின்றன…
கல்லாத கரை வேட்டி
கற்றறிந்த மூத்தோர்
சமத்துவ பூமி நான்
கட்டுக்கட்டாய்ப் பணம்
கறை பட்டாலும்
நிறையானது என் வயிறு
சிறையானது என் உடல்……
விடுதலை…..
சூ….., தந்திரம் சுகம் தரும் எந்திரம்
தன்னலமே மந்திரம்…..
என் முதலீட்டுக்கு நானே முதலாளி
ஒவ்வொருநாளும் ஆயிரம் தொழிலாளிகள்
நானே தொழிற்சாலை
என்னைக் கழிப்பறை என்றும் குறைகூறலாம்….
ஆனால் எந்த வரியும் விதிப்பதில்லை நான்….
ஆண்களும் ஆங்கிலேயனும் ஒன்றே
இரவில் விட்டுக் கொடுப்பதால்
ஆண்களும் ஆங்கிலேயனும் ஒன்றே
போராளிகளிடம் தோற்றுப் போகாமல்
பொழுதுபோக்காளனிடம் தோற்றுப் போனதால்…..
விட்டுக் கொடுத்துப் பெற்றதால்
இது விடுதலைப் போராட்டம் அல்ல
சோற்றுக்கான போராட்டம்….
அரை சாண் வயிற்றுக்காக
ஆறடி உடலை அடகு வைக்கிறேன் நாளும்
பாரத மாதாவும் பெண்ணே
நல்ல வேளை அவள் சிலையாகி விட்டாள்
நீதி தேவதையும் ஒரு பெண்ணே
நித்தமும் கண் கட்டப்பட்டு விடுகிறது
நீதியைக் கற்பழிக்கும் நிதியைக் காப்பாற்ற…..
வாய்மையே வெல்லும் முழக்கத்தோடு
வாய் நிறைய புன்னகையோடு..,
தூக்கி…….ல் தொங்கவிடப்பட்ட…..
தேசத் தந்தை….
இவண்
ஆற்காடு க. குமரன்
9789814114
Leave a Reply