தலைப்பு-இறப்பின்றிவாழலாம், தமிழ்நெஞ்சன் :thalaippu_irappindrivazha_thamizhnenjan

இறப்பின்றி வாழலாம் வா!

பட்டுப்போன பனை மரமும்
கிளிகளுக்கும்
ஆந்தை மரங்கொத்திக்கும்
வாழப் பொந்தாகிறது

ஏ….மாந்தனே!
உயிர்விட்டுப் போனபின்
மண்ணோடு மண்ணாகிறாய்
இல்லெனில்
நெருப்பில் சாம்பலாகிறாய்

நீ நினைத்தால்
கண்ணற்றவர்களுக்குக்
கண்ணாகலாம்

மீண்டும் இவ்வுலகை
நீ பார்க்கலாம்

இருக்கும் போது
குருதிக் கொடை

இறந்த பின்னர்
உறுப்புக் கொடை

வள்ளல் ஆகலாம் வா!

புதுவைத் தமிழ்நெஞ்சன்