தலைப்பு-உயிர்த்தமிழில் பாடி வைப்பேன் : thalaippu_uyirthamizhil_kalaikuuthan

நினைக்கிறதை உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்!

                நீடுலகில் தான்வாழும் வரையென் அன்பு

மனைக்கிழத்தி மேடைகளில் முழங்கி நிற்பாள்!

                மக்களெலாம் முத்தமிழ் பயின்று போற்றும்

வினைக்கென்றே வளர்த்திடுவேன்! இம்மா ஞாலம்

                வெல்தமிழன் சிறப்புணரக் கேட்ட பின்பு

எனைக்கொன்று விடுபடைப்பே! புலமை மூத்தோன்

                என்சிதைக்குத் தமிழ்ப்பாடித் தீமூட் டட்டும்!

                                                                                                                                – கவிஞர் கலைக்கூத்தன்

    (மும்பையில் வாழ்ந்து மறைந்த கவிஞர்)

 

http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=534