* உதிர்ந்த சருகு

மிதிபடவில்லை சாலையில்

ஊரடங்கு உத்தரவு

 

* வாலாட்டியபடி

தெருவில் நாய்

உணவிடுவோர் காணவில்லை

 

* கரிக்கீல்சாலைகள் முழுக்க

கானல் நீர் பாய்கிறது

தண்ணீர் தேடும் ஏழை

 

* சாலையோரம் ஓய்வில்

பாரம் சுமந்த வண்டிகள்

சோகம் சுமக்கும் தொழிலாளி

 

 * பீதியில் வெளுத்த முகம்

பசித்த வயிறு

சலவைத் தொழிலாளி

 கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 94432 59288