எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!

 

ஒன்றும் ஒன்றும் இரண்டு

யாவர்க்கும் கண்கள் இரண்டு

 

ஒன்றும் இரண்டும்  மூன்று

இயல் இசை நாடகம் மூன்று

 

ஒன்றும் மூன்றும் நான்கு

விலங்கின் கால்கள் நான்கு

 

ஒன்றும் நான்கும் ஐந்து

கையில் விரல்கள் ஐந்து

 

ஒன்றும் ஐந்தும் ஆறு

மனிதர்க்கு அறிவு ஆறு

 

ஒன்றும் ஆறும் ஏழு

கிழமைகள் மொத்தம் ஏழு

 

ஒன்றும் ஏழும் எட்டு

தொகை நூல்கள் எட்டு

 

ஒன்றும் எட்டும் ஒன்பது

உயர்மணி வகைகள் ஒன்பது

 

ஒன்றும் ஒன்பதும் பத்து

இருகால் விரல்கள் பத்து

 

எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!

எண்ணம் சிறந்து வாழ்ந்திடுவோம்!

 
இலக்குவனார் திருவள்ளுவன்