ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்! – மறைமலை இலக்குவனார்
இழுக்கு நிறைந்த போலிச் சடங்கும்
அழுக்குப் படிந்த மூடத் தனங்களும்
அழுத்தி வைத்த அடிமை வாழ்வே
ஆண்டவன் கொடையென மயங்கிய நாளில்
ஆதவன் உதயமாய் விடியல் அளித்தார்;
நாணத் தக்க சாதிப் பீடையால்
கூனிக் குறுகிக் கிடந்த தமிழரை
ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்;
பெரியார் பெருமை உரைக்கவும் இயலுமோ?
-மறைமலை இலக்குவனார்
Leave a Reply