கணக்கைப் படிப்போம் எளிதாக!

 

ஒன்றும் ஒன்றும் இரண்டு

திருக்குறள் அடிகள் இரண்டு

 

இரண்டும் இரண்டும் நான்கு

நாலடியார் அடிகள் நான்கு

 

மூன்றும் மூன்றும் ஆறு

ஏலாதிப் பாடற்பொருள் ஆறு

 

நான்கும் நான்கும் எட்டு

வேற்றுமை உருபுகள் எட்டு

 

ஐந்தும் ஐந்தும் பத்து

பாட்டு நூல்கள் பத்து

 

ஆறும் ஆறும் பன்னிரண்டு

உயிரெழுத்துகள் பன்னிரண்டு

 

ஏழும் ஏழும் பதினான்கு

சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு

 

எட்டும் எட்டும் பதினாறு

கல்வி முதலான செல்வங்கள் பதினாறு

 

ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு

மெய்யெழுத்துகள் பதினெட்டு

 

பத்தும் பத்தும் இருபது

இலக்கிய வண்ணங்கள்  இருபது

 

கணக்கைப் படிப்போம் எளிதாக!

தமிழையும் அறிவோம் சிறப்பாக!

– இலக்குவனார் திருவள்ளுவன்